(Source: ECI/ABP News/ABP Majha)
HBD RJ Balaji: இந்த சிரிப்பு மனிதன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா? ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாள் இன்று
HBD RJ Balaji : ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளான இன்று அவரின் திருமண வாழ்க்கை குறித்தும் அவரின் மனைவி பற்றியும் மனம் திறந்து அவர் சொன்ன சில விஷங்களை பார்க்கலாம்.
சமூக ஆர்வலர், ரேடியோ ஜாக்கி, கிரிக்கெட் வர்ணனையாளர், நடிகர், இயக்குநர் என பன் முக திறமையாளராக விளங்கும் ஆர்.ஜே. பாலாஜியின் பிளஸ் பாய்ண்ட்களில் ஒன்று அவரின் துடிப்பான பேச்சு. அதில் கிண்டலும் கேலியும் நக்கலும் நையாண்டியும் கலந்து இருந்தாலும் சட்டென நம்மை சிரிக்க வைப்பவர். க்ராஸ்டாக் என்ற வெற்றிகரமான நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இன்று தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துமான ஸ்டைலில் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாள் இன்று. இன்றைய தினத்தில் அவரின் காதல் திருமணத்தில் நடந்த ட்ராஜெடி பற்றியும் அவர் கடந்து வந்த போராட்டங்கள் பற்றியும் பார்க்கலாம்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைக்கதையை போலவே மூன்று தங்கைகள் ஒரு தம்பி, வயசான தாத்தா, அம்மா அப்பா என மிகவும் பெரிய குடும்பம். ஆர்.ஜே. பாலாஜி காலேஜில் படிக்கும் போது அவரின் நெருக்கிய தோழியாக இருந்தவர் திவ்யா. பைனல் இயர் படிக்கும் போது தான் அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பையும் தாண்டிய ஒரு அன்பு இருந்தது புரிந்துள்ளது. 21 வயசில் வீட்டை விட்டு திவ்யா வெளியில் வர என்ன செய்வது என புரியாமல் பாலாஜி தன்னுடைய புரொபசரிடம் 1500 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு சென்னை வந்து நண்பர்கள் உதவியுடன் இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்து பின்னர் ஒரு கோயிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது “பொறுப்பில்லாத அப்பா, வேலை இல்லை, தம்பி தங்கைகளை படிக்கச் வைக்க வேண்டும், வயசான தாத்தா இப்படி ஒரு குடும்ப சூழல் இருக்கும் போது கல்யாணம் பண்ணிட்டு போன அந்த பொண்ணு வீட்டில் அதை எப்படி ஏத்துகொள்வாங்க. இப்படி நிறைய குழப்பமும் அந்த வயசில் வர பயமும் இருந்து.
இருந்தாலும் கல்யாணம் முடிந்ததும் வீட்டுக்கு போனால் திவ்யாவுடைய வீட்டில் பெரிய கலவரம் வெடிக்கும், பெரிய பிரச்சினை பஞ்சாயத்து எல்லாம் நடக்கும் என எதிர்பார்த்தால் சப்பையாக கல்யாணம் முடிஞ்சுதா வாங்க மாப்பிளை என சேர்த்துக்கிட்டாங்க. அட இது தெரிஞ்சு இருந்தா அவசரப்படாம பொறுமையா கல்யாணம் பண்ணி இருக்கலாமே என தோணுச்சு.
நான் கல்யாணம் பண்ணிக்குறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் ரேடியோவில் எனக்கு வேலை கிடைச்சுது. சரி பையன் இனி குடும்ப பாரத்தை பார்த்துப்பான் என நினைச்சுகிட்டு இருந்த எங்க அப்பாவுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததும் ஷாக்காகிடுச்சு. எப்போ எப்போ என காத்துகிட்டு இருந்த எங்க அப்பா இதை காரணம் காட்டி வீட்டை விட்டு வெளியே போயிட்டார்.
சென்னையில என்னோட குடும்பம் இருக்கணும், தம்பி தங்கச்சி படிக்கச் வைக்கணும், உடம்பு சரியில்லாத தாத்தாவோட மருத்தவ செலவை பாத்துக்கணும், புது கல்யாணம் பண்ணிகிட்ட நானும் என்னோட மனைவியும் கோயம்பத்தூரில் வாழனும். இது எல்லாமே என்னுடைய 9700 ரூபாய் சம்பளத்தில். இது வேலைக்கே ஆகாதுப்பா என பத்து தடவைக்கும் மேலாக நாங்க பிரிஞ்சு போய் மீண்டும் சேர்ந்து இருக்கோம். ஏகப்பட்ட சிக்கல், மனக்கஷ்டம், பண கஷ்டம் எல்லாத்தையும் கடந்து வந்தது தான் எங்களை இன்று நல்ல மனிதர்களாக வாழ வைத்துள்ளது” என முடித்தார்.