மேலும் அறிய
Advertisement
Ritika Singh Birthday: சூப்பர்ஸ்டார் படத்தில் நடித்தால் கோடிகளில் சம்பளமா..? கெத்து காட்டும் ரித்திகா சிங்
Ritika Singh Birthday: பிறந்த நாள் கொண்டாடும் ரித்திகா சிங் நடித்த படங்கள் மற்றும் அவரது சொத்துக்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Ritika Singh Birthday: இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தில் இணைந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு கோடிகளில் இருப்பதாக இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரித்திகா சிங் அறிமுகமானார். அதில் பாக்ஸராக நடித்த ரித்திகா சிங் முதல் படத்திலேயே பிரபலமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை ரித்திகா சிங்கிற்கு கொடுத்தது. இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தில் நடித்த ரித்திகா சிங், அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங் முக்கியமான கேரக்டரில் நடிப்பதால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் ரித்திகா சிங்கிற்கு காயம் ஏற்பட்ட தகவல் இணையத்தில் பகிரப்பட்டது. சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகளே ஆனாலும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ள ரித்திகா சிங் 8 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக உள்ளார். இன்று அவரது பிறந்த நாள் என்பதால் ரித்திகா சிங் நடித்த படங்கள் மற்றும் அவரது சொத்துக்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ரித்திகா சிங்கின் புகைப்படத்தை பகிரும் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
மேலும் படிக்க: Anand Babu: என்னோட பொழப்பே மாறிப்போச்சு... டாக்டராக வேண்டியவன் நான்... மனம் திறந்த ஆனந்த் பாபு
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion