Richard Rishi Yashika Aannand: காதலுடன் ஒரு கார் பயணம்.... யாஷிகாவுடன் மீண்டும் புகைப்படம் பகிர்ந்த அஜித் மச்சான்...
Richard Rishi Yashika Aannand Pic: 45 வயது நடிகரான ரிச்சர்ட், 23 வயது நடிகையான யாஷிகாவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டன.
தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள சமீபத்திய ஜோடி ரிச்சர்ட் ரிஷி - யாஷிகா ஆனந்த்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்துள்ள நடிகை ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி, 2002ஆம் ஆண்டு காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து கூத்து, யுகா, பெண் சிங்கம் என பல படங்களில் நடித்து வந்தபோதும் சரியான ப்ரேக் கிடைக்காமல் திணறி வந்த ரிச்சர்ட் ரிஷிக்கு 2016ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படம் திருப்புமுனை அளித்தது.
தொடர்ந்து மோகன்.ஜி இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான திரௌபதி, 2021ஆம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் படங்களால் கோலிவுட்டில் கவனம் பெற்றார். இந்நிலையில் நடிகை யாஷிகாவுடன் கடந்த மே 29ஆம் தேதி இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையதள சென்சேஷனாக மாறின.
காரில் அமர்ந்து முத்தமிட்டபடியும், சன் கிஸ்ட் புகைப்படத்தையும் ரிச்சர்ட் தன் இணைய பக்கத்தில் பகிர சமூக வலைதளங்கள் பரபரப்பாகின. இந்நிலையில், 45 வயது நடிகரான ரிச்சர்ட், 23 வயது நடிகையான யாஷிகாவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டன.
மேலும் குடிபோதையில் கார் விபத்தில் சிக்கியது தொடங்கி நடிகை யாஷிகா சர்ச்சை முகமாக கோலிவுட்டில் அறியப்பட்டு வரும் நிலையில் அவரை டேட் செய்யும் வகையில் ரிச்சர்ட் பகிர்ந்த புகைப்படங்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பின.
இந்நிலையில், இந்தப் பரபரப்புகளுக்கு தீனி போடும் வகையில் ரிச்சர்ட் மீண்டும் யாஷிகாவுடன் தன் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்துள்ளார். மேலும் காருக்காக தாங்கள் காத்திருப்பது போலவும், காரில் பயணிப்பது போலவும் ரிச்சர்ட் முன்னதாக் இன்ஸ்டாவில் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பி வைரலாகி வருகின்றன.
View this post on Instagram
நடிகர் ரிச்சர்ட் ரிஷி இன்று வரை சோலோவாக வலம் வரும் நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு இவருக்கு பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று, பின் கருத்து வேறுபாடு காரணமாக நின்ரது. அதன் பின் தற்போது தான் காதல் தொடர்பான கிசுகிசு செய்திகளில் ரிச்சர்ட் ரிஷியின் பெயர் இடம்பெறுகிறது.
‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். மேலும், 2018ஆம் ஆண்டு நடிகர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2ஆவது சீசனில் பங்கேற்று யாஷிகா பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.