மேலும் அறிய

Actor Karthi: இன்று ‘ஜப்பான்’ படம் ரிலீஸ்.. கார்த்தியின் முந்தைய தீபாவளி படங்களின் நிலைமை என்ன தெரியுமா?

நடிகர் கார்த்தி நடிப்பில் “ஜப்பான்” படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள நிலையில் அவரின் முந்தைய தீபாவளி ரிலீஸ் படங்கள் பற்றி காணலாம்.. 

நடிகர் கார்த்தி நடிப்பில் “ஜப்பான்” படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள நிலையில் அவரின் முந்தைய தீபாவளி ரிலீஸ் படங்கள் பற்றி காணலாம்.. 

2007 ஆம் ஆண்டு பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு சிறப்பான அறிமுகத்தோடு திரையுலகில் களம் கண்டார் கார்த்தி. அவரின் முதல் தீபாவளி ரிலீஸ் 6 ஆண்டுகள் கழித்தே நடந்தேறியது.

ஆல் இன் ஆல் அழகுராஜா

இயக்குனர் ராஜேஷ் முதல்முறையாக கார்த்தி உடன் கூட்டணி சேர்ந்த படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இந்தப் படம் 2013 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. காஜல் அகர்வால்,பிரபு,சந்தானம்,ராதிகா ஆப்தே,நாசர்,சரண்யா,ஆடுகளம் நரேன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்தனர். தமன் இசையமைத்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி அடைந்தது. ஆனால் இன்றைக்கு டிவியில் ஒளிபரப்பும் போது அந்த படத்துக்கென ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்பது தனிக்கதை. 

காஷ்மோரா

ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் கார்த்தியை வைத்து காஷ்மோரா என்னும் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தில் நயன்தாரா  ஸ்ரீதிவ்யா, விவேக் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த காஷ்மோரா படம் மீண்டும் கார்த்திக்கு தீபாவளி தினத்தில் படுதோல்வியாகவே அமைந்தது. இந்த படத்துக்காக மொட்டை தலையுடன் மிரட்டும் லுக்கில் அவர் நடித்திருந்தார். 

கைதி

2019 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கைதி என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்த நிலையில் இதில் நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஸ் உத்தமன், தீனா, ரமணா, ஜார்ஜ் மரியன் என பலரும் நடித்தனர். நடிகர் விஜய் நடித்த பிகில் படத்துடன் மோதிய கைதி படம் கார்த்தியின் முதல் தீபாவளி ரிலீஸின் வெற்றிப்படமாக அமைந்தது. 

சர்தார்

2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் “சர்தார்”. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் ராஷி கண்ணா, லைலா, ரஷிஜா விஜயன், யூகி சேது, முனிஷ் காந்த், ரித்விக், பாலாஜி சக்திவேல் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தண்ணீர் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சர்தார் படம் கார்த்திக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படமாகவே அமைந்து விட்டது. 

ஜப்பான்

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் ஜப்பான் படம் இன்று (நவம்பர் 10) வெளியாகியுள்ளது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு இம்மானுவேல், சுனில் வர்மா, விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் மீண்டும் கார்த்திக்கு கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
Embed widget