Rashmika - Vijay Devarakonda: பிப்ரவரியில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கு நிச்சயதார்த்தமா.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
Rashmika - Vijay Devarakonda: அடுத்த மாதம் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி நிச்சயம் செய்து கொள்ள போகிறார்கள் எனும் தகவல் வைரலாகி வருகிறது.
திரையுலகில் நட்சத்திரங்கள் இடையே ஏற்படும் பெரும்பாலான நட்பு அதையும் கடந்து திருமணம் வரை எடுத்து செல்லும். அப்படி திரையுலகில் மிகவும் முக்கியமான அழகான ஒரு ஜோடியாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா. திரையில் இவர்கள் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி படு சூப்பராக இருக்கும்.
தென்னிந்திய சினிமாவில் எக்ஸ்பிரஷன் குயின் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் டீன்ஸ் ஹார்ட் த்ரோப் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். திரை ரசிகர்களின் மத்தியில் லவ்வபிள் பேர் என அழைக்கப்படும் இவர்கள் இருவரும் பல மாதங்களாக டேட்டிங் செய்து வருகின்றனர் என்ற செய்திகள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
டேட்டிங் செய்யும் ஜோடி :
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருக்குமே ஏராளமான பேன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இருவரும் தனித்தனியே அவரவரின் படங்களில் மும்மரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இருப்பினும் அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக டேட்டிங் செய்து வந்தனர் என்றும், ஒரே மாதிரியான உடைகள் அணிந்து வெவ்வேறு இடங்களில் காணப்பட்டனர் என்றும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது தீப்பொறி கிளம்பி வைரலாகும். செய்திகள் வேகமாக பகிரப்பட்டு சலசலப்பை ஏற்படுத்தினாலும் இருவர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு கருத்தோ அல்லது மறுப்போ வந்ததே கிடையாது.
விரைவில் நிச்சயதார்த்தம் :
அந்த வகையில் தற்போது கிளம்பியுள்ள செய்தி என்னவென்றால் விரைவில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற போகிறது என்பதுதான். அதுவும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெறப் போகிறது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தீபாவளியை நடிகை ராஷ்மிகா மந்தனா ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் கொண்டாடினார் என்றும் அவர்கள் இருவரும் சேர்ந்து விடுமுறையை ஒன்றாக கழித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
ராஷ்மிகாவின் அடுத்தடுத்த படங்கள் :
'குட் பை' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மகளாக நடித்திருந்தார். முதல் படத்துலேயே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக 'அனிமல்' படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 800 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது புஷ்பா : தி ரூல், தி கேர்ள் பிரெண்ட், ரெயின்போ, சாவா உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டாவின் நெக்ஸ்ட் :
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான 'குஷி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது பரசுராம் பெட்லாவின் இயக்கத்தில் 'பேமிலி ஸ்டார்' மற்றும் 'விடி 12' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் இந்த நிச்சயதார்த்தம் குறித்த தகவல் வெறும் வதந்தியா அல்லது உண்மையா என்பது குறித்த விளக்கத்தை அவர்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் அவரின் ரசிகர்கள்!