Ranveer Singh | "King will always be king” - கோலியின் போஸ்ட்டில் கமெண்ட் செய்த ரன்வீர் சிங்..
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை விராட்கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை விராட்கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் விராட்டில் பதிவில் கருத்து தெரிவித்திருக்கும் ரன்வீர் சிங், “ராஜா எப்போதுமே ராஜாதான்” என கமெண்ட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக விராட் கோலி இன்று அறிவித்தார். கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், இந்திய அணி நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இந்நிலையில், தான் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக பெரிய விளக்க கடிதத்தை எழுதி அறிவித்திருக்கிறார் கோலி.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், “7 ஆண்டுக்கால உழைப்பு இது. இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும், சரியான பாதையில் கொண்டு செல்லவும் ஒவ்வொரு நாளும் அயராத உழைத்திருக்கிறேன். நான் செய்த வேலையில் நேர்மையாக இருந்திருக்கிறேன். எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும், டெஸ்ட் கேப்டன் பொறுப்புக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது. அது இப்போதுதான்” என பதிவிட்டிருக்கிறார்.
View this post on Instagram
இந்திய அணிக்கு நெருக்கடியான நேரத்தில் 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட்கோலி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். இதில் இந்திய அணி 40 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளது. 17 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 11 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்