Watch Video: ‘ரன்வீர் சிங் பவர்டு பை தீபிகா படுகோன்’ - எமோஷனல் ஆன ஃபிலிம்பேர் மேடை!
நடிகர் ரன்வீர்சிங் விருது மேடையில் அழுத வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
67வது Wolf777news ஃபிலிம்பேர் விருதுகள் 2022 சமீபத்தில் நடைபெற்றது. பாலிவுட்டின் சிறந்த நடிகர்கள், சிறந்த இயக்குநர்கள், சிறந்த இசைக்கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மும்பையின் பிகேசியில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆகஸ்ட் 30ம் தேதியன்று இந்த விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
View this post on Instagram
அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், விக்கி கௌஷல், மலைக்கா அரோரா, கியாரா அத்வானி, திஷா பதானி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை விக்கி கௌஷல் சர்தார் உதம் (கிரிட்டிக் தேர்வு) படத்திற்காகவும் ‘83’ படத்திற்காக ரன்வீர் சிங்கும் சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்றனர்.
View this post on Instagram
இந்த நிலையில் ரன்வீர் சிங் நிகழ்ச்சியில் தான் விருது வாங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “ சிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய ரன்வீர் சிங் விருதை தனது பெற்றோர் மற்றும் தங்கைக்கு டெடிகேட் செய்வதாக கூறினார்.
மேலும் அவர்களை கடவுள் என்று குறிப்பிட்ட அவர் எனது வாழ்கையில் தான் செய்வது எல்லாம் அவர்களுக்காகத்தான். என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் என் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. பெரும்பாலான நேரங்களில், நான் இங்கே இருக்கிறேன், இதைச் செய்கிறேன், உங்கள் அனைவருக்கும் முன்னால் நிற்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
தினமும் எழும்போது நான் ஒரு நடிகன் என்பது எனக்கு நம்பமுடியாததாகவே இருக்கிறது. இது அதியசம் தான். என்னை என்னுடைய கனவில் வாழ வைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. லட்சுமி தேவி என்னுடைய வீட்டில் இருக்கிறாள். என்னுடைய சக்ஸஸ் சீக்ரெட் இங்குதான் இருக்கிறது என்ற ரன்வீர் மனைவி தீபிகா படுகோனை மேடைக்கு அழைத்து வந்து... ‘ரன்வீர் சிங் பவர்டு பை தீபிகா படுகோன்’ என்று கூறி மனைவியை முத்தமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.