Ranjithame Varisu Song: ‛விஜய் பின்னியிருக்காரு...யாரும் உட்கார மாட்டிங்க’ ரஞ்சிதமே பாடல் பற்றி தமன் ட்வீட்!
Ranjithame Varisu Song: யூட்யூப்பில் 26 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் ட்ரெண்டிங் நம்பர் 1-ல் உள்ளது.
![Ranjithame Varisu Song: ‛விஜய் பின்னியிருக்காரு...யாரும் உட்கார மாட்டிங்க’ ரஞ்சிதமே பாடல் பற்றி தமன் ட்வீட்! Ranjithame Varisu Song Thaman Watches Full Video Vijay Ranjithame Song No Will Sit on Their Seats on Theatre Ranjithame Varisu Song: ‛விஜய் பின்னியிருக்காரு...யாரும் உட்கார மாட்டிங்க’ ரஞ்சிதமே பாடல் பற்றி தமன் ட்வீட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/8a9544bcb72027dd7a1bac69c3e75f201667896761084572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் திரையில் பார்க்க எப்படி இருக்கும் என்பது குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார்.
வாரிசு பொங்கல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
View this post on Instagram
தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜூன் 21 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 5 ஆம் தேதி “ரஞ்சிதமே” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. விவேக் வரிகளில் நடிகர் விஜய் , மானஸி பாடியுள்ள இப்பாடல் பல பாடல்களின் காப்பி என சர்ச்சை எழுந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தெறி ஹிட்
யூட்யூப்பில் 26 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் ட்ரெண்டிங் நம்பர் 1-ல் உள்ளது. மேலும் வீடியோவில் இடம் பெற்ற டான்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் முதல்முறையாக ஜோடி சேர்ந்த விஜய் - ராஷ்மிகா ஜோடியும் சூப்பராக உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பாடல் தியேட்டரில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்தது.
#Ranjithamey full Video Ippo dhannn Paathennn. ❤️ theatre la Seat 💺 laaa yaaruu maee okkaramatttinggaaa 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 DOT 💪🏼🚀🚀🚀🚀🚀🚀 ungalloodaaa nannummmm orruuu rasigaaanna 🫶#Anna @actorvijay 💃💃💃💃💃💃💃💃💃
— thaman S (@MusicThaman) November 8, 2022
Pinniiiii peddalllllll 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இதற்கு விடையளிக்கும் விதமாக வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோவை இப்போதுதான் பார்த்தேன். தியேட்டர்ல சீட்ல யாரும் உட்கார மாட்டிங்க. உங்களோட நானும் ஒரு ரசிகனா காத்துட்டு இருக்கேன். நடிகர் விஜய் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)