Ranam Teaser: ”தேடவேண்டியது முடிவை அல்ல.. ஆரம்பத்தை” : 25-வது படத்தில் சீரியஸ் கேரக்டராக வரும் வைபவ்; வெளியானது ரணம் டீசர்
நடிகர் வைபவ்-இன் 25வது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
![Ranam Teaser: ”தேடவேண்டியது முடிவை அல்ல.. ஆரம்பத்தை” : 25-வது படத்தில் சீரியஸ் கேரக்டராக வரும் வைபவ்; வெளியானது ரணம் டீசர் Ranam Official Teaser Released Vaibhav Nandita Movie Teaser Out- Watch Ranam Teaser: ”தேடவேண்டியது முடிவை அல்ல.. ஆரம்பத்தை” : 25-வது படத்தில் சீரியஸ் கேரக்டராக வரும் வைபவ்; வெளியானது ரணம் டீசர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/04/6dfe382166484d661c076505a61a65b91691158476955102_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வைபவ். 2004ஆம் ஆண்டு சரோஜாவில் அறிமுகமான வைபவ் இதுவரை 24 படங்களில் நடித்துள்ளார். இவரது 25-வது படமான ரணம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிகவும் சீரியஸான கேரக்டரில் நடித்துள்ள வைபவுக்கு இப்படம் பாராட்டைப் பெற்றுத் தரும் என கூறும் அளவிற்கு டீசர் அமைந்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நந்திதா நடித்துள்ளார்.
பயத்தை விதைக்கும் பின்னணி இசையில், மிகவும் உறுதியான வைபவின் குரலில் படத்தின் டீசரைப் பார்க்கும் போது படம் க்ரைம் த்ரில்லர் கதை என்பது தெளிவாகிறது. அண்மைக்கால தமிழ் சினிமாவில் பார்வையாளர்களை பயத்தில் உறைய வைக்கும் படங்கள் வரிசையில் உள்ள படங்கள் என்றால் அது, ராட்சசன் மற்றும் போர் தொழில் ஆகிய படங்களைச் சொல்லலாம். அப்படங்களின் டீசர் எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல க்ரைம் திரில்லர் என்ற படம் என்ற நம்பிக்கையை விதைத்ததோ அதேபோல் இப்படத்தின் டீசரும் விதைத்துள்ளது. படத்தில் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் முகத்தை வரையும் கலைஞராக நடித்துள்ள வைபவுக்கு, ஒரு கொலை அவரது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் படத்தின் கதை. ” நம்மளைத் தேடி வரும் எல்லா விஷயத்துக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்பதில் தொடங்கி, தேடவேண்டியது முடிவை அல்ல.. ஆரம்பத்தை” என்கின்ற வசனத்தில் முடிகின்றது டீசர்.
வைபவ் மாதிரியான ஜாலியான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகரை மிகவும் சீரியஸான கதாப்பாத்திரத்தில் பார்க்கும்போது திரையில் எடுபடுமா என்பதை படம் ரீலீசான பின்னர்தான் கூறமுடியும். படக்குழு தரப்பில் இருந்து இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்பவில்லை.
இயக்குநர் ஷெரிவ் கதை எழுதி இயக்கியுள்ள ரணம் படத்தை மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸின் மது நாகராஜன் தயாரித்துள்ளார். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவும், முனீஸ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு அரோல் கொரேல்லி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் இதோ.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)