மேலும் அறிய

Ramya Krishnan, Roja: இது ஒரு மீட் - அப்.. ரம்யா கிருஷ்ணன் பத்தி ரோஜா என்ன சொன்னாங்க தெரியுமா?

Ramya Krishnan, Roja: நடிகை ரம்யா கிருஷ்ணனை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியில் பதிவுசெய்த ரோஜாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

நடிகை ரம்யா கிருஷ்ணனை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியில் ரோஜாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் 90-களில் மிகவும் பிரபலமான நடிகையா இருந்தவர்கள் ரோஜா. ரம்யா கிருஷ்ணன். எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் இருவருவரின் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பர். இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்றளவும் அது தொடர்கிறது. ரம்யா கிருஷ்ணன் பாகுபலியில் நடித்தது அனைவரின் ஃபேவரைட்டாக அமைந்துபோனது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், என பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளமே உண்டு. புலரும்போல் என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டி மோகன் லாலுடன் இணைந்து நடித்ததுதான் அவரின் திரையுலக பயணத்தின் தொடக்கம். நடிகை ரம்யா கிருஷ்ணன் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அன்றிலிருந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில்  நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் ரோல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

1989-ம் ஆண்டில் சுட்ரதருலு என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது. அது சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.  இவர் அம்மன் வேடத்தில் நடித்தது அனைவருக்கும் பிடித்துப்போனது. படையப்பா படத்தில் நீலாம்பரி கதபாத்திரத்தில் நடித்தது இவருடைய தமிழ் திரை வாழ்க்கையில் பெரும் புகழை தேடி தந்தது. பஞ்சதந்திரம் மேகி என இவருடைய சிறந்த ரோல் பட்டியல் நீளும். அதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து சின்னத்திரையிலும் தன் முத்திரையைப் பதித்தார். இன்றும் நிறைய ரோல்களில் நடித்து வருகிறார், ரம்யா கிருஷ்ணன். அவர் எப்போதும் தான் நடிக்கும் படங்களுக்கு அவரே டப்பிங் செய்வார்.

நடிகை ரோஜாவும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர். செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ரோஜாவை ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு ஜோடியானார். ரோஜாவின் நடினமும் நடிப்பும் பேசப்பட்டன. பின்னர். முன்னணி கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்தன. ரோஜாவுக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் பலரது பாராட்டுகளையும் பெற்றார். பொட்டு அம்மன் படத்தில் துர்கையாக நடித்து சூப்பர் ஹிட் ஆனது. பல வெரைட்டியான படங்களில் நடித்து தன் முத்திரையைப் பதித்தார். 

View this post on Instagram
 
A post shared by Roja Selvamani (@rojaselvamani)

பின்னர், மனதார விரும்பிய ஆர்.கே. செல்வமணியை மணம் புரிந்தார். தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சினிமா எக்ஸ்பிரஸ் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு கிடைத்தது. 

அப்போது, ஆந்திர அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கினார். அரசியலில் அடுத்தடுத்து முன்னேறினார். தேர்தலில் வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினரானார். 

ரம்யா கிருஷணன் -ரோஜா சந்திப்பு:

இருவருமே நல்ல நண்பர்கள். ரோஜா அரசியல் பணியில் பிஸியாக இருக்கிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசம் செய்ய சென்ற ரம்யா கிருஷ்ணன், ரோஜா வீட்டுக்குச் சென்றுள்ளார். 

நீண்ட நாள் கழித்து, வீட்டுக்கு வந்த ரம்யா கிருஷ்ணனை, ரோஜா தனது கணவருடன் வரவேற்றுள்ளார். அவருக்கு அன்பு பரிசாக பெருமாள் சிலை ஒன்றையும் கொடுத்துள்ளார். நண்பர்கள் இருவரும் வெகு நாட்கள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளதாக இருவரும் தெரிவித்தனர். 

நடிகை ரோஜா இன்ஸ்டாகிரம் போஸ்ட்

ரம்யா கிருஷ்ணனை சந்தித்தது குறித்து ரோஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஃபோட்டோ, வீடியோ-வை பகிந்துள்ளார். ரோஜா இன்ஸ்டாகிராம் போஸ்டில்.” நல்ல நண்பர்கள் நட்சத்திரங்கள் போல, எப்போதும் அவர்களை காண்பது சாத்தியமில்லை;ஆனால், அவர்கள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பது நன்றாக தெரியும். என் வீட்டிற்கு வந்த நட்சத்திரத்தை (ரம்யா கிருஷ்ணன்) அன்புடன் வரவேற்கிறேன். இன்றைய நாளை மிகவும் அழகாக மாற்றிய நட்சத்திரத்திற்கு (ரம்யா கிருஷ்ணன்) அன்பு. நட்சத்திரத்தை மனதார வரவேற்று மகிழ்கிறேன். நாம் சினிமா காலத்தில் பயணித்தபோது இருந்த நாட்கள் அப்படியே நினைவிருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால், காலங்கள் கடந்தாலும், நாம் சந்திக்கும்போது நம்மை உணரும் தருணம் அழகானது. மகிழ்ச்சியானது. Recconecting with my bestie" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த போஸ்ட்டுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
TNPSC Update: தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TNPSC Update: தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
Embed widget