மேலும் அறிய
Advertisement
Ram Charan: ராம்சரண் மகளை பார்த்துக் கொள்பவருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்துப் போன ரசிகர்கள்!
Ram Charan: தனது குழந்தையைப் பேணி, பராமரிக்கும் பெண்ணுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் ராம் சரண்.
Ram Charan: பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், தனது மகளை பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் ஸ்டார் குடும்பத்தை சேர்ந்தவர் ராம் சரண். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர், ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் பெரிதாகப் பேசப்பட்டார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் கேம் சேஞ்சர் படத்தை இயக்குநர் சங்கர் இயக்குகிறார்.
தந்தை சிரஞ்சீவியை போல் நடிப்பில் அசத்தி வரும் ராம் சரண், 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிப்பு மட்டுமில்லாமல் மனைவி உபாசனாவுடன் இணைந்து பிசினசிலும் ராம் சரண் கலக்கி வருகிறார். இந்தத் தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், கிளின் காரா எனக் குழந்தைக்கு பெயரிட்டுள்ளனர்.
இருவரும் நடிப்பு மற்றும் பிசினசில் பிசியாக இருப்பதால் குழந்தையைப் பராமரிக்க ஒரு பெண்ணை நியமித்துள்ளனர். அவரது பெயர் சாவித்ரி என்று தெரியவந்துள்ளது. தனது குழந்தையை பராமரித்துக் கொள்ளும் அந்தப் பெண்ணிற்கு ராம் சரண் மாத சம்பளமாக ரூ.1.5 லட்சம் வழங்குவதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
இதற்கிடையே ராம்சரணின் மகளுடன் பராமரிப்பு பெண் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராம்சரணின் குழந்தையை பராமரிக்கும் சாவித்ரி, பாலிவுட் நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் குழந்தையை பராமரித்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Vijay Tamil Cinema: இனி விஜய் இல்லாத தமிழ் சினிமாவும் திரைத்துறை வணிகமும் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பார்வை
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion