Rajinikanth Admitted In Kauvery Hospital | ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதி..
நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது
தாதா சாகேப் பால்கே விருது பெற்றநிலையில் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பினர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
முன்னதாக இன்று காலை குடும்பத்துடன் அண்ணாத்த படத்தை பார்த்ததாக தெரிவித்திருந்தார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிளில் தொடங்கி நேற்று வெளியான ட்ரெய்லர் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் படத்தை தனது குடும்பத்துடன் பார்த்துள்ளார் ரஜினிகாந்த் . இது குறித்து ஹூட் செயலியில் பகிந்துள்ள ரஜினிகாந்த் “ நான் என் மகள்கள் , மருமகன் விஷால் , மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன் அண்ணாத்த படத்தை பார்த்தோம். குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து என பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டிப்பிடித்து தாத்து தாத்து படம் வெரி நைஸ் என்றான்.அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் என்னை தாத்து என அழைப்பது வழக்கம். படம் முடித்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்கிற்கு வெளியே காத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.. மணி 10க்கு மேல் இருக்கும்..அப்போது என்ன சார் இங்க என கேட்டேன்...இல்லை உங்களை பார்க்கணும் என்றார்.. பிஸியான ஆளாக இருப்பவர் , என்னை சந்திக்கணும் என்றார். எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே!” என குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிhttps://t.co/wupaoCQKa2 | #Rajinikanth | #chennai | #Rajini pic.twitter.com/w3CSpP7zT6
— ABP Nadu (@abpnadu) October 28, 2021
எனினும், மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை. இதையடுத்து லதா ரஜினிகாந்த்திடம் இது தொடர்பாக கேட்டபோது ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காகவே காவிரி மருத்துவமனைக்கு ரஜினி வந்திருக்கிறார் என ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்