![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Rajini on Vikram Movie: சூப்பர்...சூப்பர்...சூப்பர்... விக்ரம் படத்தை புகழ்ந்துதள்ளிய சூப்பர்ஸ்டார்.. கொண்டாடும் ரசிகர்கள்..
சமீபகாலமாக ரஜினி ரிலீஸாகும் படங்களை எல்லாம் தொடர்ந்து பார்த்து சம்பந்தப்பட்ட படக்குழுவினரை பாராட்டி வருகிறார்
![Rajini on Vikram Movie: சூப்பர்...சூப்பர்...சூப்பர்... விக்ரம் படத்தை புகழ்ந்துதள்ளிய சூப்பர்ஸ்டார்.. கொண்டாடும் ரசிகர்கள்.. Rajinikanth Watched Vikram Movie Praised Kamal Haasan, Lokesh Kanagaraj and Team over Phone Rajini on Vikram Movie: சூப்பர்...சூப்பர்...சூப்பர்... விக்ரம் படத்தை புகழ்ந்துதள்ளிய சூப்பர்ஸ்டார்.. கொண்டாடும் ரசிகர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/05/bdbfb65f1a8446855f8ef4927d6aff56_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படம் ரிலீஸான நாள் முதல் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி தள்ளியுள்ளனர்.
Hearing Superstar @rajinikanth has watched #Vikram and called up #Ulaganayagan @ikamalhaasan and told him "Super.. Super.. Super.. "
— Ramesh Bala (@rameshlaus) June 5, 2022
He also called @Dir_Lokesh , @anirudhofficial and Co-producer #Mahendran and congratulated them..
What a nice gesture 👏
விக்ரம் படம் தமிழகத்தில் விரைவில் ரூ.100 கோடி வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.படம் முடிந்ததும் உடனடியாக நடிகர் கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு படம் சூப்பர்..சூப்பர்..என தனக்கே உரித்தான ஸ்டைலில் பாராட்டியுள்ளார். மேலும் படக்குழுவினருக்கும் போன் செய்து ரஜினி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த வாழ்த்து படக்குழுவினர், கமல் ரசிகர்கள் என பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக விக்ரம் படத்தின் ரிலீஸூக்கு முன்னால் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தனர் மேலும் சமீபகாலமாக ரஜினி ரிலீஸாகும் படங்களை எல்லாம் தொடர்ந்து பார்த்து சம்பந்தப்பட்ட படக்குழுவினரை பாராட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)