45 ஆயிரம் டிக்கெட் விற்பனை..ஜப்பானில் வசூல் வேட்டையில் வேட்டையன்..இத்தனை கோடி வசூலா!
Vettaiyan in Japan : த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த ஆண்டு வெளியான வேட்டையன் திரைப்படம் ஜப்பானில் வெளியாகியுள்ளது

த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்தது. துஷாரா விஜயன் , ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன் , ரானா டகுபதி , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்தார். தற்போது ஜப்பானில் வெளியாகி மக்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.
ஜப்பானில் வெளியான வேட்டையன்
ஜெயிலர் படத்தின் கமர்சியல் வெற்றியைத் தொடர்ந்து வெளியான வேட்டையன் ரஜினி ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. மற்ற படங்களைப் போல் மாஸ் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் வேட்டையன் திரைப்படம் கதைக்கு முக்கியத்துவம் அளித்ததே படத்தின் மைனசாக கருதப்பட்டது. வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் ரூ 259 கோடி வசூலித்தது. தற்போது ஜப்பானில் வெளியாகியுள்ள வேட்டையன் அங்குள்ள விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பயங்கர பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது
ஜப்பானில் வேட்டையன் வசூல்
இதுவரை வேட்டையன் படத்திற்கு 45 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 3.4 கோடி வசூலீட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு பெருகி வரும் வரவேற்பால் ஜப்பானில் வேட்டையன் ஒரு ரவுண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.
What's happening in #Japan? Anga oru sambhavam nadandhutu iruku. #Vettaiyan pattaya kilapittu iruku anga. Trend la kondu vaanga makkale. There are so many Posts from Japanese Fans. Namma aalu anga irundha updates kudunga. Collections add aagum. Mega Blockbuster.#Rajinikanth pic.twitter.com/a5IrpvXgrU
— D. GNANAPANDITHAN (2.0) (@dgnanapandithan) September 9, 2025
ரஜினி படங்களுக்கு ஜப்பானில் மிகப்பெரியளவில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். ரஜினி நடித்த முத்து திரைப்படம் 1998 ஆம் ஆண்டு ஜப்பானில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஜப்பானில் அதிகம் வசூலித்த ஒரே இந்திய படமாக சாதனை படைத்தது . 2022 ஆம் ஆண்டு ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் 24 ஆண்டுகள் கழித்து முத்து படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது . ஜப்பானில் ரஜினிக்கு என தனி ரசிகர் மன்றமும் இயங்கி வருகிறது.





















