Vettaiyan Box Office : தலைவர் குறி வச்சா எற விழும்... வேட்டையன் வசூல் நிலவரத்தை வெளியிட்ட லைகா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் 240 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது
வேட்டையன் வசூல்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகியது. படம் வெளியான முதல் நாள் முதலே சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. படத்திற்கு ஓப்பனிங் இல்லை, திரையரங்குகள் காலியாக இருக்கின்றன, படம் ஃப்ளாப் என ஏகப்பட்ட வதந்திகள் உலா வந்தன.
தற்போது வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் நான்கு வசூல் நிலவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி உலகளவில் வேட்டையன் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ 240 கோடி வசூலித்துள்ளது. படத்திற்கு ஸ்லோவான ஓப்பனிங் இருந்தாலும் மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் வேட்டையன் படத்திற்கு மேலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி வரக்கூடிய வாரங்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
VETTAIYAN 🕶️ crosses 240+ crores worldwide and still counting! 🤩 Thalaivar's dominance knows no bounds. 🔥 The hunt continues! 🦅 #VettaiyanRunningSuccessfully 🕶️ in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/Y5gLyk8gsC
— Lyca Productions (@LycaProductions) October 14, 2024
விஜய் நடித்த கடந்த மாதம் வெளியான தி கோட் திரைப்படம் முதல் நான்கு நாட்களில் 288 கோடி வசூலித்தது குறிப்பிடத் தக்கது.