Nelson Dilipkumar: ஜெயிலர் படம் ரிலீஸ்.. நெல்சனுக்கு விபூதி அடித்த இணையவாசி.. ட்விட்டரில் நடந்த கலவரம்..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பெயரில் போலியான அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பெயரில் போலியான அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வெளியானது ஜெயிலர் படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் இன்று உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார்,மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ஏற்கனவே ஜெயிலர் படத்தின் பாடல்கள், இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்ததால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருந்தது. அதன்படி இன்று படம் வெளியானதை முன்னிட்டு தியேட்டர்கள் தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்கள் என திருவிழா நடக்கும் இடங்கள் போல களைகட்டியுள்ளது. இப்படியான நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பெயரில் போலியான அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் படிக்க: Jailer Release LIVE : ‘அலப்பற கெளப்புறோம் தலைவரு நிரந்தரம்..’ ஜெயிலர் படம் தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் காண...
நெல்சன் பெயரில் போலியான அறிக்கை
அந்த அறிக்கையில், “ நான் சிறிய வயதில் இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை மிகவும் ரசித்தேன். இன்று அவரை வைத்து படம் இயக்குவது என்பது எதிர்பார்க்காத அனுபவம் தான். மேலும் ஜெயிலர் படத்துக்காக கிட்டதட்ட 18 மாதங்கள் வேலை செய்தோம். இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலாநிதிமாறன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . நிச்சயம் ஜெயிலர் படம் என்னுடைய கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும், இந்தப் படத்தின் சூட்டிங் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
#JailerFromTomorrow 😊🙏🏻!
— Nelson Dilipkumar (@mr_kk001_) August 9, 2023
Thanks to @rajinikanth sir @sunpictures @anirudhofficial @tamannaahspeaks @Mohanlal sir #Shivarajkumar sir @SonyMusicSouth @meramyakrishnan mam @mirnaaofficial @iYogiBabu and my team❤️.#Jailer🔥 #JailerFromAug10 pic.twitter.com/zWR2VuWBXW
அதே சமயம் ஜெயிலர் படம் தியேட்டர்களில் உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன். படம் பார்ப்பதற்கு முன் நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை மீண்டும் ஒரு முறை பார்க்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஏன் பீஸ்ட் படத்தை மட்டும் விட்டு விட்டீர்கள் எனவும், போலியாக இருந்தாலும், ஒரு நியாயம் வேணாமாடா எனவும் கடுப்பாகினர்.
நம்பிக்கையோடு காத்திருக்கும் ரசிகர்கள்
ஏற்கனவே நெல்சன் கடைசியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக நடிகர் விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்களை பெறும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியது. ஆனால் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆவதற்குள் ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பீஸ்ட் படத்தின் ரிசல்டால் ரஜினி ரசிகர்கள் பதறிப் போயினர். அதையும் மீறி ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தனது கேரியரை செதுக்கிய இயக்குநர்கள் வரிசையில் நெல்சனுக்கும் இடம் உண்டு எனவும் ரஜினி தெரிவித்திருந்தார். அதேபோல் ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படம் சரியாக போகவில்லை. இதனால் இருவரின் ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.