மேலும் அறிய

Thalaivar 170: 33 வருடத்திற்கு பிறகு... ‘இதயம் சந்தோஷத்தில் துடிக்கிறது’ - அமிதாப்புடன் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த சூப்பர்ஸ்டார்!

தலைவர் 170 படத்துக்காக மும்பை சென்றிருக்கும் ரஜினி, நடிகர் அமிதாப்பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வசூலில் ரூ.600 கோடியை தாண்டிய நிலையில் ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகவுள்ள “லால் சலாம்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 170 என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி, நாகர்கோயில், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 2ஆம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மும்பை சென்றார். கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி பூஜை தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டானது. மேலும் ஷூட்டிங் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “ஜெயிலர் படத்துக்கு எதிர்பார்த்ததுக்கு மேலான வெற்றி கிடைத்துள்ளது. 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஞானவேல் பண்றாரு. இது நல்ல சமூக கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ரஜினி, நடிகர் அமிதாப்பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை  தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி

Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்

CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?

Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?

ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!

IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!

பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்

Embed widget