மேலும் அறிய

தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?

தனுஷின் ஓம் திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் அதே நாளில் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஏற்கெனவே அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் தனுஷின் 'ஓம்' திரைப்படத்தின் வெளியீடு குறித்து திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் புதிய விவாதம் உருவாகியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'ஓம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி சில வாரங்களுக்கு முன்பே அக்டோபர் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் பணிகளும் அதற்கேற்ப முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதே தேதியில் ரஜினியின் 'ஜெயிலர் 2' வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது வசூல் போட்டி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் போது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை அதே தேதியில் வெளியிட தயங்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையாகும். திரையரங்குகளின் எண்ணிக்கை, ரசிகர்களின் பெரும் வரவேற்பு மற்றும் வசூல் ஆதிக்கம் ஆகிய காரணங்களால், ரஜினி படங்களுக்கு தனி இடம் அளிக்கும் வகையில் பல திரைப்படங்கள் தங்களது வெளியீட்டை ஒத்திவைத்த சம்பவங்கள் ஏராளம்.

கடந்த காலங்களிலும் ரஜினியின் 'ஜெயிலர்', 'அண்ணாத்த', 'தர்பார்', 'பேட்ட' உள்ளிட்ட படங்கள் வெளியாகியபோது, பல நடுத்தர மற்றும் சிறிய படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டன. சில தயாரிப்பாளர்கள் நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வெளியீட்டை அறிவித்திருந்தனர். இதனால் திரையரங்குகளும் வசூலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிந்தது.

தனுஷ் ரசிகர்கள் ஆதங்கம்

ஓம் படத்தின் ரிலீஸ் தேதி முன்பே அறிவிக்கப்பட்டும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்ச்சர்ஸ் அறிவித்திருப்பது தனுஷ் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் படத்தை ஒத்திவைக்கக் கூடாது , ஓம் திரைப்படம் நிச்சயம் சூப்பரான கமர்சியல் படமாக இருக்கும் என ரசிகக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget