அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
டாடாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Nexon Camo Edition காரின் விலை, சிறப்பம்சங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் டாடா நிறுவனம். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. டாடாவின் கார்களில் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று Nexon.
Nexon Camo Edition:
இந்த காரின் அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது Nexon Camo Edition. மிகவும் எதி்ர்பார்க்கப்பட்ட இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரைப் பற்றி கீழே விரிவாக காணலாம்.
சிறப்பம்சங்கள்:
இந்த காரில் 12.3 இன்ச் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 10.25 இன்ச் ஹார்மன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. டேஷ்கேம் ரெக்கார்டர் வசதி உள்ளது. கேமோ பேட்ஜிங் வசதி உள்ளது. 360 டிகிரி எச்டி சர்ரவுண்ட் வியூ கேமரா உள்ளது.
வயர்லஸ் ஆன்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி உள்ளது. 16 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆறு ஏர்பேக்குகள் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டாபிளிட்டி ப்ரோக்ரம் வசதி உள்ளது. டூ ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் உள்ளது.
வசதிகள்:
ஆட்டோ ஃபோல்ட் ஓஆர்விஎம் வசதி உள்ளது. 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளது. ரூஃப் ரெய்ல்ஸ் வசதி உள்ளது. ஓட்டுநரின் இருக்கை சரி செய்யும் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ( சிஎன்ஜி வேரியண்டில் இந்த வசதி இல்லை)
Creative+ S Camo காரில் வாய்ஸ் அசிஸ்டட் எலக்ட்ரிக் மேற்கூரை, ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள் மற்றும் ரெயின் சென்சிங் வைபர்ஸ் வசதி உள்ளது. மேலும், குரல் கட்டளை பனோரமிக் மேற்கூரை, முன்பக்க பார்க்கிங் சென்சார், ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் வசதிகள் போன்ற வசதிகள் இடம்பெறும்.
ஆட்டோமெட்டிக் வேரியண்டில் அடாஸ் வசதிகளான ஃபார்வர்ட் காலிசன் வார்னிங், ஆட்டோனோமஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங், லேன் சென்ட்ரிங் அசிஸ்ட், ட்ராஃபிக் சைன் ரெகெக்னிஷன், லேன் டிபர்சர், ஹை பீம் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் வசதி உள்ளது.
விலை எவ்வளவு?
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9.99 லட்சம் மற்றும் இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.54 லட்சம் ஆகும்.
Creative CAMO (Manual): Rs. 9.99 lakh
Creative + S CAMO (Manual): Rs. 10.64 lakh
Creative + PS CAMO (Manual / DCA): Rs. 11.64 lakh / Rs. 12.79 lakh
Fearless + PS CAMO (Manual): Rs. 12.59 lakhFearless + A PS CAMO (DCA): Rs. 13.94 lakh
டீசல் ஆஃப்சன்:
Creative CAMO (Manual / AMT) - Rs. 11.54 lakh / Rs. 12.14 lakh
Creative + S CAMO (Manual / AMT): Rs. 11.79 lakh / Rs. 12.44 lakh
சிஎன்ஜி:
Creative CAMO (Manual) - Rs. 11.39 lakh
Creative + S CAMO (Manual): Rs. 11.69 lakh
Creative + PS CAMO (Manual): Rs. 12.59 lakh
Fearless + PS CAMO (Manual): Rs. 13.54 lakh
இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















