மேலும் அறிய

Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் இடம்பெற்றுள்ள முடிச்சுரலாமா? வசனத்தையும், கமல் நடித்த விக்ரம் படத்தில் இடம்பெற்ற ஆரம்பிக்கலாமா? வசனத்தையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்து வரும் வேட்டையன் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171-ல் நடித்து வருகிறார்.

முடிச்சுரலாமா?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று இந்த படத்தின் பெயர் டீசருடன் அறிவிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜாக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் மையப் பொருளாக போதைப்பொருள்கள் இருந்து வந்தது. இந்த படத்தின் டீசரில் முழுக்க முழுக்க தங்கமே பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் தனது ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற தப்பென்ன சரியென்ன வசனத்தை பேசியுள்ள ரஜினிகாந்த், டீசரின் இறுதியில் முடிச்சுரலாமா? என்று பேசியிருப்பார்.

கமல் - ரஜினி:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில், கமல்ஹாசன் பேசும் ஆரம்பிக்கலாமா? என்ற வசனம் மிகவும் பிரபலம். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு எப்படி ஆரம்பிக்கலாமா? என்ற வசனத்தை லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தாரோ? அதேபோல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு முடிச்சுரலாமா? என்று பெயர் வைத்துள்ளார்.

கமல்ஹாசனின் ஆரம்பிக்கலாமா? ரஜினிகாந்தின் முடிச்சுரலாமா? வசனங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய லியோ படத்தில் நடிகர் விஜய் ப்ளடி ஸ்வீட் என்று பேசும் வசனமும் இடம்பெறும். இதையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்:

நடுத்தர வயதான தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஆரம்பகால ஆக்‌ஷன் படம்போல இந்த படம் உருவாகியிருப்பதால், இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநாதி மாறன் தயாரித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Embed widget