மேலும் அறிய

HBD Rajinikanth : அவருக்கு எண்டே கிடையாது.. என்றுமே ராஜா நீ ரஜினி.. ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்..

Happy Birthday Rajinikanth: தமிழ் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் இன்று. இவர் சிக்கிய சர்ச்சைகள் சிலவற்றை காண்போம்.

கே. பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் வில்லனாக அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிம்ம சொப்பனாக திகழும் நடிகர் ரஜினிகாந்த். பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டில் பிறந்த இவர், நடத்துனராக இருந்து நடிகராக வளர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. உலகின் எங்கோவொரு மூலையில் சிவாஜி ராவ்வாக பிறந்த இவர் இன்று சூப்பர் ஸ்டார் என டீ கடை முதல் பாராளுமன்றம் வரை அறியப்படுகிறார். நடிகர் ரஜினிகாந்தை, சூப்பர் ஸ்டார், மக்களின் நாயகன், தலைவா என பல பெயர்களால் ஆஹா ஓஹோவென புகழந்தாலும், இவரது செயல்களையும், குணாதிசயத்தையும் சிலர் குறை கூறுவதுண்டு. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம் வாங்க..

கன்னடம் பேசுபவர் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரா?

தமிழ் திரையுலகில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் காலூன்றுவதை விட, வேறு மொழி பேசுபவர்கள்தான் அதிகமாக வெற்றி பெறுகின்றனர். அதற்கு ரஜினிகாந்தும் விதிவிலக்கல்ல. சிவாஜிராவ் கெய்க்குவாட் என்ற தனது பெயரை, படங்களில் நடிப்பதற்காக ரஜினி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். 1975-ல் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த இவர், இன்று தமிழின் ஒன்-அண்ட்-ஒன்லி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்திருக்கிறார் என்றால், அதற்கு காரணம் இவரது கடின உழைப்பும் தனிச்சிறப்பும்தான். ஆனால் இதை புரிந்து கொள்ளாத சிலர், “கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் தமிழ் சினிமாவை ஆளுவதா?” என்ற எரிச்சலில் இருந்தார்கள். 

HBD Rajinikanth : அவருக்கு எண்டே கிடையாது.. என்றுமே ராஜா நீ ரஜினி.. ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்..

கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிப்பவரா ரஜினி?

1990களுக்கு பிறகு, ரஜினி நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள், காதல், சண்டை, பழைய பகை போன்ற அம்சங்கள் நிறைந்த கமர்ஷியல் படங்களாகவே இருக்கின்றன. அதே சமயத்தில், இவரைப் போலவே அதிகம் ரசிகர்களைக் கொண்டவர் உலகநாயகன் கமல். மற்ற கதாநாயகர்கள் ஒரு ஆக்ஷன் காமெடி என ஒரு ட்ராக்கில் பயணித்தால், நடிப்பு நடிப்பு நடிப்பு என தனக்கென ஒரு தனி ட்ராக்கில் பயணிப்பவர் கமல். அவர் ஒரு முறை கமர்ஷியல் படங்களை விட்டு வேறு பாணியில் படங்கள் நடிக்கலாமே என ரஜினியிடம் கூறியபோது எல்லாம் எனக்கு தெரியும் என்பதுபோல செய்கை செய்தாராம் ரஜினி. இப்படி செவி வழி கேட்கப்பட்ட கதைகள் பல இருந்தாலும், ரஜினி கமர்ஷியல் படங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதற்கு காரணம், ரசிகர்களுக்கு ரஜினியின் நடிப்பை பிடித்திருப்பதைவிட, அவர் பேசும் பஞ்ச் வசனங்களையும் ஸ்டைலையுமே மிகவும் பிடித்திருக்கிறது என்பதுதான். 

HBD Rajinikanth : அவருக்கு எண்டே கிடையாது.. என்றுமே ராஜா நீ ரஜினி.. ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்..

இதன் காரணமாக, பலருக்கு பல சமயங்களில் “ரஜினியை கொஞ்சம் ஓவராகத்தான் இந்த தமிழ் சினிமா கொண்டாடுகிறதோ..” என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஆனாலும், ஒரு சாமானியனுக்கு புரியக்கூடிய வகையில் கதையைத் தேர்ந்தெடுக்கும் நேர்த்தி, இவருக்கு மட்டுமே தெரியும் என்பதால், இன்னும்கூட பல வருடங்களுக்கு ரஜினி சூப்பர் ஸ்டாராக நீடிப்பார் என்பதில் ஆச்சரியம் இல்லை.

ரிலீஸின் போது மட்டும் அரசியல் பேசுவாரா?

தமிழ் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நீண்ட நெடு நாட்களாக தொடர்பு உண்டு. எம் ஜி ஆர், ஜெயலலிதா தொட்டு நடிகர்களை விடாமல் துரத்தி வருகிறது அரசியல் மோகம். இதுபோலதான் அரசியலும், ரஜினியும் பிரிக்கவும் முடியாத இணைக்கவும் முடியாத காந்த சக்தி போன்றது. தனது ஆரம்ப காலத்தில், நடிக்க மட்டும் வந்த இவர், சினிமாவில் கொஞ்சம் புகழ் பெற்ற பிறகு தான் பேசும் பஞ்ச் வசனங்களில் மறைமுகமாக மற்றும் நேரடியாக அரசயல் வசனங்களை கலக்க ஆரம்பித்தார். இப்போது ரீ-ரிலீஸ் ஆகியுள்ள பாபா படத்தில் இடம் பெற்ற க்ளைமேக்ஸ் பாடலில் கூட, “கட்சிகளையும் பதவிகளையும் நான் விரும்ப மாட்டேன், காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்” என்ற வரியை சிரித்துக் கொண்டே பாடி, அரசியலில் வருவதற்கு அப்போதே ஹிண்ட் கொடுத்திருப்பார் ரஜினி. இந்த படத்தில் மட்டுமல்ல, 1990 முதல் சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் உள்பட பல படங்களில் “பதவி, கட்சி” என பேசியிருப்பார் ரஜினி. இதனால் “தலைவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்” என நம்பிய ரஜினியின் ரசிகர்கள், கடைசியல் “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்று பாட்டு பாட வேண்டிய நிலைமை வந்து விட்டது. இது போன்ற அரசியல் டைலாக் பேசி பாடல்களை பாடுவது படம் ஹிட் அடிக்க இவர் உபயோகப்படுத்தும்  ரஜினி உத்தியோ என பலருக்கு சந்தேகம் எழத்தொடங்கி விட்டது. 

HBD Rajinikanth : அவருக்கு எண்டே கிடையாது.. என்றுமே ராஜா நீ ரஜினி.. ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்..

இறுதியில், “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என ரசிகர்களுக்கு வாக்கு கொடுத்த தலைவர், கடைசியல் “அரசியலுக்கு இனி வரவே மாட்டேன்” என எழுதியே கொடுத்து விட்டார். உடல் நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து ஜகா வாங்கினாலும், இதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பலர், தங்களை ஏமாற்றி விட்டதாகவே நினைக்கின்றனர். 

என்ன இருந்தாலும், எப்படி இருந்தாலும், நமக்குள் இருக்கும் ரஜினிக்கு எண்ட்டே கிடையாது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர்ஸ்டார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Embed widget