Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் எங்களை மிரட்டுகிறார்” என பேட்டியளித்த நபர் மறுநாளே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த பிரதீப் ராஜ் என்பவர் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்.
அப்போது, தான் செய்யாத குற்றத்திற்கு போலீசார் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தன் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும், நவநீதம் என்பவரிடம் தனது தாய்க்கு தெரிந்தவர் பணம் வாங்கியதாகவும், அவர் பணத்தை செலுத்த தவறிய நிலையில் தங்களிடம் பணத்தை கட்டுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், இதுவரை சுமார் ரூ.18 லட்சம் வரை தாங்கள் பணம் செலுத்தியுள்ளதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு நச்சரிப்பதாகவும் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்ததாகவும், இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தங்களை நேரில் அழைத்து மிரட்டியதாகவும் பிரதீப் ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் மிரட்டுவதாக குற்றம்சாட்டி பேட்டி அளித்த பிரதீப் ராஜ், தற்போது திருவொற்றியூர் மேற்கு மாட வீதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ராஜை வெட்டிப் படுகொலை செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















