மேலும் அறிய

தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..

Thai Maman Thanga Mothiram Thittam: தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த திட்டத்தில் யாருக்கெல்லாம் தகுதி உள்ளது.? விண்ணப்பிப்பது எப்படி.? தேவைப்படும் ஆவணங்கள் என்ன என்பது தொடர்பாக தகவல்களை தற்போது பார்க்கலாம்.

தாய் மாமன் சீர்- ஒரு கிராம் தங்க மோதிரம்

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாய் மாமன் சீராக, பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழர் பாரம்பரியத்தில், "தாய்மாமன் சீர்" என்ற மரபின்படி,  தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தது. 

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்

அந்த வகையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் பிறந்தநாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று  தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க வெளிநாடு பயணம் சென்றதால் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு இன்று தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைக்கவுள்ளார். அந்த வகையில் இந்த திட்டத்தில் யார் யார் பயன்பெறலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம், 

யார் யாருக்கெல்லாம் ஒரு கிராம் தங்க மோதிரம்.?

புதியதாக பிறந்த குழந்தைகளுக்கு 22 காரட் ஹால்மார்க் தரத்திலான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளின் கீழ் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மட்டும் 89 ஆயிரத்து 955 தங்க மோதிரங்களை தயாரித்து முதற்கட்டமாக வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 7.8 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன.  மொத்தப் பிறப்புகளில் 99.9% மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களாக உள்ளன. இதில், அரசு சுகாதார நிலையங்கள் ஏறக்குறைய 4.2 லட்சம் (53%) பிரசவங்களை மேற்கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் ஒரு பிரசவத்திற்கு ஆகும் சராசரி செலவு ரூ.63,473/- ஆக உள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் அது வெறும் ரூ.1,364/- மட்டுமே என்று தேசிய மாதிரி ஆய்வு மூலம்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தாய் மாமன் தங்க மோதிர திட்டம்- தேவைப்படும் ஆவணங்கள்

1. குடும்ப அட்டை (Ration Card); 
2. வாக்காளர் அடையாள அட்டை; 
3. ஆதார் அட்டை; 
4. தொழிலாளர் நல வாரியங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை; 
5. அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட "முகவரிச் சான்று அட்டை" (Proof of Address Card); 
6. பிறப்பிடச் சான்றிதழ்.

தகுதியானவர்கள் யார்.?

1.தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.

2. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும்.

3. தாய், RCH ID உடன் PICME-இல் பதிவு செய்திருக்க வேண்டும்.

4. பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சட்டசபையில் நேருக்கு நேர்.. முகத்தை பார்க்கவே வெட்கப்படும் இபிஎஸ்.. வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்!
சட்டசபையில் நேருக்கு நேர்.. முகத்தை பார்க்கவே வெட்கப்படும் இபிஎஸ்.. வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்!
தஞ்சையில் கொள்முதல் நிலையத்தில் 4,500 மூட்டைகள் தேக்கம்! மழை பெய்தால் நிலைமை விபரீதம்?
தஞ்சையில் கொள்முதல் நிலையத்தில் 4,500 மூட்டைகள் தேக்கம்! மழை பெய்தால் நிலைமை விபரீதம்?
தஞ்சையில் குரூப்-1 தேர்வு: 1,385 பேர் ஆப்சென்ட்! 8 மையங்களில் 4,259 பேர் தேர்வு எழுதினர்!
தஞ்சையில் குரூப்-1 தேர்வு: 1,385 பேர் ஆப்சென்ட்! 8 மையங்களில் 4,259 பேர் தேர்வு எழுதினர்!
Aadhav Arjuna: ”அந்தபுரத்து இளவரசர் தான் உதயநிதி” ஆபாச பேச்சு தொடர்பாக ஆதவ் அர்ஜுனா காட்டமான பதிலடி
”அந்தபுரத்து இளவரசர் தான் உதயநிதி” ஆபாச பேச்சு தொடர்பாக ஆதவ் அர்ஜுனா காட்டமான பதிலடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Mahindra Thar OG: தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
Embed widget