VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை தவெக சார்பாக போட்டியிட்ட வி.எஸ். பாபு, மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக பொறுப்பேற்ற வி.எஸ்.பாபு அப்பகுதி மக்களுக்கான பல்வேறு திட்டங்களை வலியுறத்தி சட்டமன்றத்தில் குரல் எழுப்பியிருந்தார். மேலும் பல திட்டங்களையும் செயல்பட்ட நடவடிக்கை எடுத்து வந்தார். நேற்று கட்சி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வி.எஸ் பாபு, இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென வி.எஸ்.பாபுவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. மூச்சு விட திணறிய நிலையில் உறவினர்கள் அவசர அவசரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு உறுப்பினர் திரு. V. S. பாபு அவர்கள், மூச்சுத்திணறல்/சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த 2026 செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் (MGM Healthcare) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) பல்துறை சிறப்பு மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்குத் தேவையான உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் சுவாசத்திற்கான ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சிகிச்சைகள் மூலம் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது (Stable). அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருந்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















