மேலும் அறிய

Raghav Chadha Net Worth: பர்னீதி சோப்ராவை கரம்பிடிக்கும் ஆம் ஆத்மி எம்.பி..! யார் இந்த ராகவ் சட்டா..? அவரது சொத்து மதிப்பு என்ன?

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சட்டா இருவருக்கும் நேற்று பிரம்மாண்டமாக நிச்சயம் நடைபெற்றது.

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சட்டா இருவருக்கும் நேற்று பிரம்மாண்டமாக நிச்சயம் நடைபெற்றது. டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  இந்நிலையில் யார் இந்த ராகவ் சட்டா? அவரின் மொத்த சொத்து மதிப்பு என்ன? என்பதை பார்க்கலாம்.

யார் இந்த ராகவ் சட்டா? 

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். இவர் டெல்லியில் உள்ள மார்டன் பள்ளியில் தனது பள்ளி படிப்பையும், டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பையும் முடித்தார். அதன்பின், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் சி.ஏ முடித்தார். பின்னர், சில ஆண்டுகளாக பல நிறுவனங்களில் கணக்காளராக பணியாற்றினார். அதன்பின் 2011ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.

ஆம் ஆத்மி கட்சி தொடக்கத்தில் இருந்து ஒரு அங்கமாக இருந்து வருகிறார் ராகவ் சட்டா. ஆம் ஆத்மி கட்சியில் மிக இளையவராக ராகவ் சட்டா உள்ளார்.  2015 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடம் வெற்றி பெற்றபோது, அப்போது கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், பஞ்சாப் தேர்தலிலும் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். 

சொத்து மதிப்பு

பகவந்த் மானைப் போலவே இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார் ராகவ் சட்டா. அவர் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் அவருக்குப் பல்வேறு பொறுப்புகளை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராகவ் சட்டாவின் மொத்த சொத்து மதிப்பானது சுமார் ரூ.50 லட்சம் இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர், ரூ.4,95,000 மதிப்புள்ள நகைகளையும், மாருதி ஸ்விஃப்ட்  டிசையர் கார் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி, சுமார்  ரூ.37 லட்சம் மதிப்பில் சொந்தமாக ஒரு வீட்டை சமீபத்தில் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் இந்த பரினீதி சோப்ரா? 

மான்செஸ்டர் வணிக பள்ளியில் நிதியியல்,வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவில் பட்டம் பெற்ற உள்ளார். பரினீதி சோப்ரா துவக்கத்தில் இருந்து வங்கியியல் வேலை பார்க்க விரும்பினார். பரினீதி சோப்ரா யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக பணியாற்றினார்.

லேடீஸ் vs ரிக்கிபால் திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகம் ஆனார். லேடீஸ் vs ரிக்கிபால் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இஸக்‌ஷாதே திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருது,(சிறப்பு விருது) பெற்றார். பரினீதி சோப்ராவின் நெருங்கிய நண்பர் ஆதித்யா ராய். பரினீதி சோப்ரா சுமார் 18 விருதுகளை வென்றுள்ளார்.

பரினீதி சோப்ராவின் மொத்த சொத்து மதிப்பானது ரூ.60 கோடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 4 சொகுசு கார்களை வைத்துள்ளார். அதன்படி, ஆடி ஏ6(Audi A6), ஆடி கியூ5 (Audi q5), ஜாகுவார் எஸ்ஜேஎல் (jaguar XJL) ஆகியவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget