Watch Video: கண்ணின் மணி நிஜம் கேளம்மா... 'சித்தி' ராதிகா காட்சிகளை ரீ க்ரியேட் செய்த மகள் ரேயான்!
மனதுக்கு மிகவும் நெருக்கமான சாராதவையும் 'சித்தி' சீரியலின் டைட்டில் பாடலையும் ரீ கிரியேட் செய்துள்ள ராதிகாவின் மகள் ரேயான்.
சின்னத்திரையில் மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தியவை 90களின் பிரபல மெகா சீரியல்கள். அதிலும் ஒரு சில சீரியல்கள் நாஸ்டால்ஜிக் ஞாபகங்களை கொண்டு வந்து ரசிகர்களை என்றுமே உற்சாகப்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு சீரியல் தான் ராதிகா சரத்குமாருக்கு அடையாளமான ‘சித்தி’ சீரியல். 1999ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பிரைம் டைமில் ஒளிபரப்பான இந்தத் தொடரில், ராதிகா சரத்குமார், சிவகுமார், யுவராணி, நீனா, தீபா வெங்கட், பூவிலங்கு மோகன், விஜய் ஆதிராஜ், அஜய் ரத்னம், ரியாஸ் கான் என ஏராளமானோர் நடித்திருந்தனர்.
90ஸ் கிட்ஸ் பேவரட்:
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படியாக கொண்டு உருவான இந்தத் தொடர் இன்று வரை 90ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மறக்க முடியாத ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இரவு 9.30 மணி ஆகிவிட்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் வாண்டுகள் வரை அனைவரும் டிவியில் முன்னர் ஆஜராகிவிடுவார்கள். சித்தியை பார்க்காமல் யாருக்கும் தூக்கமே வராது. அந்த அளவுக்கு சாரதாவாக ராதிகா அனைவரையும் ஆக்கிரமித்தார்.
சித்தி சீரியல் எந்த அளவிற்கு அனைவரின் கவனம் பெற்றதோ அதை விட பல மடங்கு அதன் டைட்டில் சாங் பலருக்கும் ரீங்காரமாக இருந்தது. "கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா..." இந்தப் பாடல் ஒலிக்காத வீடுகளே இல்லை என்ற அளவிற்கு பிரபலமாக இருந்தது.
ரீ கிரியேட் செய்துள்ள ரேயான்:
தற்போது இந்தப் பாடலை ரீ கிரியேட் செய்துள்ளார் ராதிகா சரத்குமார் மகள் ரேயான். சித்தி சாரதாவை போலவே ஆரஞ்சு கலர் பட்டுப்புடவை உடுத்தி ராதிகாவை போலவே தோற்றமளிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அம்மா பற்றியும் அவர் உடுத்தியுள்ள புடவையின் பெருமை பற்றியும் குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"இந்த உலகையே அதிர வைத்த ஒரு சீரியல் சித்தி. பலருக்கும் தெரியாத ஒன்று அது அம்மாவையும் என்னையும் என்றென்றும் மாற்றியது என்று. இந்தக் கதாபாத்திரமும் என்றும் நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.
நான் அம்மாவை போல தோற்றமளிக்கவோ அல்லது அழகாக இருக்கவோ முடியாது, ஆனால் இது அவர் மீது நான் கொண்டுள்ள அன்பினால் தான். அந்த சீரியலில் அம்மா ஆரஞ்சு நிற கோசா பட்டுப் புடவை அணிந்திருப்பார்.
View this post on Instagram
கோசா பட்டு, சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்திற்கு அருகில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் ஒரு தனித்துவமான, உயர்தர பட்டு ஆகும். இது ஒரு சுத்தமான பட்டு மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது அந்த மாவட்டத்தில் உள்ள சாஜா, அர்ஜுன் மற்றும் சால் மரங்களில் மட்டுமே காணப்படுகிறது. இது ஒரு அழகான பிரகாசத்தையும் பளபளப்பையும், அணிபவருக்கு தானாகவே நேர்த்தியையும் அளிக்கிறது” என புடவையில் பெருமை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ரேயானின் இந்த இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.