Radhika Sarathkumar : கையில் சிகரெட்.. சர்ச்சையில் சிக்கிய ராதிகா! கொலை பட போஸ்டருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
கொலை படத்தின் போஸ்டர் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக பயணம் செய்துகொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போதும் இசையில் கவனம் செலுத்தி வந்தாலும் நடிப்பதிலேயே அதிக ஆர்வத்தைக் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தொடக்கமே ரசிகர்களை சம்பாதித்தார்.ஆனால் இடையே சில படங்கள் சறுக்கினாலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் அவர் நடித்துள்ள கொலை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இப்படத்தை பாலாஜி குமார் இயக்கியுள்ளார். ரித்திகா சிங், அர்ஜூன் சிதம்பரம்,ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் போஸ்டர் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது.
Kishore as Babloo -The Manager
— Infiniti Film Ventures (@FvInfiniti) July 11, 2022
Arjun Chidambaram as Arjun - The Photographer#WhoKilledLeila? #KOLAI @vijayantony @DirBalajiKumar @FvInfiniti @lotuspictures1 @ritika_offl @Meenakshiioffl @murlisharma72 @realradikaa @sivakvijayan @ggirishh @EditorSelva @DoneChannel1 pic.twitter.com/7XfEPyrjNo
பார்ப்பதற்கு பக்காவான த்ரில்லராக தெரியும் கொலை திரைப்படம் ராதிகாவின் போஸ்டரால் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது. கையில் சிகரெட்டுடன், மாடர்ன் ட்ரெஸ் அணிந்து அமந்திருக்கும் ராதிகாவின் புகைப்படம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். போஸ்டர்களில் சிகரெட் என்பதை தொடர்ந்து ஒரு தரப்பினர் எதிர்த்து வரும் நிலையில் தற்போது ராதிகாவின் போஸ்டர் சிக்கியுள்ளது. அஜித், விஜய், தனுஷ், ரஜினி என சிகரெட்டால் பல நடிகர்கள் சிக்கலில்சிக்கிய நிலையில் அந்த லிஸ்டில் ராதிகா இணைந்துள்ளார்.
View this post on Instagram
இந்த போஸ்டர் குறித்து பதிவிட்டுள்ள சிலர் சிகரெட் என்பதை திரைத்துறை கைவிட வேண்டுமென்றும், நடிகர்களை வைத்து சிகரெட்டுடன் போஸ்டர்கள் ரிலீஸ் செய்வதை இயக்குநர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் இயக்குநர் லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அவரது படத்தின் போஸ்டர் ஒன்று காளியை அவமதிப்பதாக சர்ச்சை எழுந்தது. காளி சிகரெட் பிடிப்பது போன்று அமைக்கப்பட்ட அந்த போஸ்டருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக லீனா மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
ALSO READ | Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!