Radhika Apte: சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது.... திருமண கோலத்தில் ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே... ரசிகர்கள் ஷாக்!
கபாலி படத்தின் கதாநாயகியாக நடித்த ராதிகா ஆப்தே திருமண கோலத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
‘கபாலி’ படத்தின் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அந்தாதுன், லஸ்ட் ஸ்டோரீஸ், சோக்ட் முதலிய பாலிவுட் படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்டார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணக் கோலத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கான பின்னணி என்னத் தெரியுமா…
மேட் இன் ஹெவன்
கடந்த 2019ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான இணைய தொடர் ‘மேட் இன் ஹெவன்’. நித்யா மெஹ்ரா, ஜோயா அக்தர், பிரஷாந்த் நாயர், அலன்க்ரிதா ஸ்ரீவாஸ்தவா ஆகிய நான்கு இயக்குநர்கள் இணைந்து இந்தத் தொடரை இயக்கியிருந்தார்கள். ஷோபிதா துலிபாலா, ஜிம் ஸார்ப் , அர்ஜுன் மாதூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இரண்டு நண்பர்கள் இணைந்து திருமண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தும் ஒரு wedding planners நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள். இவர்கள் சந்திக்கும் வெவ்வேறு திருமண தம்பதிகள், அவர்களின் சிக்கல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் ‘மேட் இன் ஹெவன்’.
வெளியான நாள் முதல் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுக்களைப் பெற்றது இந்தத் தொடர். இதன் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காத்திருந்த நிலையில், சமீபத்தில் இரண்டாவது சீசன் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இரண்டாம் சீசன்
இரண்டாவது சீசனை ஜோயா அக்தர் மற்றும் ரீமா காக்தி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்கள். முந்தைய சீசனில் நடித்த நடிகர்களான ஷோபிதா துலிபாலா, அர்ஜுன் மாத்தூர், கல்கி கோச்லின், ஜிம் சர்ப், ஷஷாங்க் அரோரா மற்றும் ஷிவானி ரகுவன்ஷி ஆகியோர் இந்த சீசனிலும் தொடர்கிறார்கள்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்தத் தொடரின் இரண்டாவது சீசனுக்கான போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்தது படக்குழு. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் ஜோயா அக்தர் “இந்த முறை திருமணங்களும் நாடகங்களும் கலவரங்களும் இரண்டு மடங்காக இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார். வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தத் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோயா அக்தர்
ஜிந்தகி மிலேகி நா தோபாரா, கல்லி பாய் ஆகிய படங்களை இயக்கி பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைக் கொண்டவர் ஜோயா அக்தர். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் பாகத்தில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் அமேசான் பிரைமில் வெளியான தஹாட் இணையத் தொடரை தயாரித்தும் இருக்கிறார் ஜோயா.
திருமண கோலத்தில் நடிகர்கள்
we’re all set to welcome the brides and attend the Made In Heaven weddings, again✨#MadeInHeavenOnPrime S2, Aug 10@madeinheaventv #ZoyaAkhtar @kagtireema @nitya_mehra @alankrita601 @ghaywan @ritesh_sid @FarOutAkhtar @J10Kassim #AngadDevSingh @vishalrr @excelmovies… pic.twitter.com/kMMDATM8E2
— prime video IN (@PrimeVideoIN) July 30, 2023
இந்தத் தொடருக்கு புதிதான முறையில் புரோமோஷனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இதில் நடித்துள்ள முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, சீதா ராமம் பட நாயகி ம்ருணாள் தாகூர், தங்களது ட்விட்டர் பக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும்படியான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள் ராதிகே ஆப்தே திருமணம் செய்துகொண்டாரா என்று ஒரு கணம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.