மேலும் அறிய

Rachitha Mahalakshmi: 'இதுவும் கடந்து போகும்'.... கண்கள் குளமாக வலியுடன் ரச்சிதா போஸ்ட்... பதறி அடித்து ஆறுதல் கூறும் ரசிகர்கள்  

கண்கள் இரண்டும் குளமாக ரச்சிதா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ போஸ்ட் அவரின் ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சின்னத்திரை நட்சத்திரங்களும் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போல ஏராளமான ஃபேன் பாலோவர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பல சீரியல்களில் நடித்தாலும் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் ரச்சிதா ஏராளமான ரசிகர்களை பெற்றார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்  ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பல சர்ச்சைகளிலும் கிசுகிசுக்களிலும் சிக்கினாலும் சிறப்பாக இறுதிச்சுற்று பிக் பாஸில் தாக்குப்பிடித்தார் ரச்சிதா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பிரபலமடைந்த ரச்சிதாவுக்கு பட வாய்ப்புகளும் தேடி வருகிறது. 

 

Rachitha Mahalakshmi: 'இதுவும் கடந்து போகும்'.... கண்கள் குளமாக வலியுடன் ரச்சிதா போஸ்ட்... பதறி அடித்து ஆறுதல் கூறும் ரசிகர்கள்  

தனது கேரியரில் மெல்ல மெல்ல முன்னேறி இன்று பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருந்து வரும் ரச்சிதாவின் திருமண வாழ்க்கை அத்தனை இனிமையாக அமையவில்லை. ரீல் ஜோடியாக இருந்த தினேஷை 2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, ஒரு பாராட்டத்தக்க ஆதர்ச தம்பதியாகவே வலம் வந்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, சமீபத்தில் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிய போகிறது என பல தகவல்கள் வெளியாகின. 

சமீபத்தில் ரச்சிதா தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அவ்வப்போது தனது சந்தோஷம், துயரம் என என எந்த ஒரு தருணமாக இருந்தாலும் அதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. அந்த வகையில்  சமீப காலமாக ரச்சிதா மிகவும் சோகமான போஸ்ட்களை பதிவிட்டு வருவது அவரது ரசிகர்களை கவலை அடைய செய்து வருகிறது. 

 

Rachitha Mahalakshmi: 'இதுவும் கடந்து போகும்'.... கண்கள் குளமாக வலியுடன் ரச்சிதா போஸ்ட்... பதறி அடித்து ஆறுதல் கூறும் ரசிகர்கள்  

அந்த வகையில் ரச்சிதா தற்போது போஸ்ட் செய்துள்ள வீடியோவில்  கண்கள் குளமாக கண்ணீர் நிரம்பி வழிவது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ பின்னணியில் "நெற்றிக்கண்" படத்தில் இடம்பெற்ற மிகவும் அருமையான பாடலான "இதுவும் கடந்து போகும்" பாடல் ஒலிக்க கண்களின் மூலம் தனது மௌனமான மன போராட்டத்தையும் அதனால் அவர் அனுபவிக்கும் வலியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

"வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக: கடந்த வருடங்களை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள் என்பதைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள்..... அந்த மௌனப் போராட்டங்கள், உங்களைத் தாழ்த்தி, உங்கள் சொந்தக் கண்ணீரைத் துடைத்து, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொண்ட தருணம்... இதுவும் கடந்து போகும்... இதுவும் கடந்து போகும்... இந்த பாடலின் ஆழத்திற்கு செல்கிறேன். அந்த மேஜிக்கல் வார்த்தைகள் எனது கண்களை குளமாக்குகிறது" என்ற வலியுடன் கூடிய வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)


ரச்சிதாவின் இந்த போஸ்டுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். நீங்கள் ஐயர்ன் லேடி, சிங்கபெண், உங்களுடைய கண்ணீர் நிச்சயம் ஒரு நாள் அதற்கான கூலியை கொடுக்கும், மனதைரியதுடன் இருங்கள், உங்களை இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது எனப் பலரும் அவர்களின் கனிவான வார்த்தைகள் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.  

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget