Times Square: ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்: டைம்ஸ் சதுக்கத்தில் டிரைலரை வெளியிட்ட மாதவன் !
படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மாதவன் :
தென்னிந்திய சினிமாவில் ஜாக்லெட் பாய் என்ற அந்தஸ்தோடு வலம் வந்தவர் நடிகர் மாதவன். பாலிவுட் திரைப்படங்களிலும் அவ்வபோது நடித்து வருகிறார்.என்னதான் மாதவனுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தாலும் கூட அவர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னை வெர்சடைல் நடிகராக அடையாளப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டதாக கூறுகிறார். மாதவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.
வாழ்க்கையை படமாக்கும் மாதவன் :
மாதவன் தற்போது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். படத்திற்கு ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நம்பி நாராயணாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே செய்திருக்கிறார். மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
View this post on Instagram
டைம்ஸ் சதுக்கத்தில் டிரைலர் :
அமெரிக்காவில் 12 நாள் சுற்றுப்பயணத்தில் மாதவன் மற்றும் நம்பி நாராயணன் ஈடுபட்டுள்ளனர். நியூயார்க், சிகாகோ, ஹூஸ்டன், டல்லாஸ், அரிசோனா, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் புரமோஷன் வேலையில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் பிரபல டைம்ஸ் NASDAQ billboard கட்டிடத்தில் ராக்கெட்டரி படத்தில் ட்ரைலரை படக்குழுவினர் பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளனர். அப்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் டைம்ஸ் சதுக்கத்தின் வெளியே டிரைலரை கண்டுகளித்தனர். அந்த வீடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
யார் இந்த நம்பி நாராயணன் ?
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் (Nambi Narayanan) ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கடந்த 1994-ம் ஆண்டு கேரள போலீசால் கைது செய்யப்பட்டார் . பின்னர் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நம்பி நாராயணன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மாதவன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.