Pushpa : The Rule begins : நெருப்புடா! நெருங்குடா ! புஷ்பா : தி ரூல் தொடங்கியாச்சு... வெளியானது ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ்
தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படம் புஷ்பா: தி ரூல் திரைப்படம் தான். இப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படம் என்றால், எந்த சந்தேகமும் இன்றி அது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா : தி ரூல் திரைப்படம் தான். இப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
2021-ஆம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு திரைப்படம் புஷ்பா : தி ரைஸ். தெலுங்கு திரைப்படமாக உருவாகி ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாகி உலகளவில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியான புஷ்பா: தி ரூல் படத்தின் படப்பிடிப்பு இன்று மிகவும் விறுவிறுப்பாக தொடங்கியது. படத்தின் ஷூட்டிங் தலத்தில் இருந்து ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் புகைப்படத்தை தற்போது தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த அப்டேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா இதை தனது ட்வீட் மூலம் பகிர்ந்து அதற்கு "லுக் அட் தாட் ! இட்ஸ் ஸ்டார்டிங் "என தனது உற்சாகத்தை வார்த்தையால் பதிவிட்டுள்ளார்.
🔥🔥🔥🔥 look at thaaaaat! 🔥 it’s starting y’all 💃🏻 https://t.co/tr8VhuOvO7
— Rashmika Mandanna (@iamRashmika) October 17, 2022
மீண்டும் அதே கூட்டணி :
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அடி தூள் செய்தது. இப்படத்தில் பிரபல சந்தன கடத்தல் காரராக நடித்த அல்லு அர்ஜுன் 2021-ஆம் ஆண்டின் டாக் அஃப் தி டவுன் ஆனார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் பாசில், தனஞ்சயா உள்ளிட்டோர் இப்படத்திலும் இணைந்துள்ளார்கள்.
Bunny Boy 🖤🔥@alluarjun • #PushpaTheRule pic.twitter.com/KKbQeuu0XS
— Rakesh AADhf (@RakeshKonduru96) October 17, 2022
புஷ்பா : தி ரைஸ் திரைப்படம் மூலம் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இப்படத்தின் மூலம் ரசிகர்களை கட்டி போட்டு விட்டனர். அதே ஆர்வம் கொஞ்சம் கூட குறையாமல் புஷ்பா : தி ரூல் திரைப்படத்திற்கும் உள்ளது. படக்குழுவினர்களோடு இப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் :
படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் புகைப்படத்தில் இயக்குனர் சுகுமார் படக்குழுவினருக்கு சில அட்வைஸ் கொடுப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. இதில் போஸ்டர் டிசைனர் ட்யூனி ஜான் மற்றும் செலிபிரிட்டி போட்டோகிராபர் உடன் உள்ளனர். ஒரு பிரமாண்டமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது என்றும் இந்த புஷ்பா படத்தின் தொடர்ச்சி நிச்சயமாக ஒரு பெரிய ஹிட் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது.