Pushpa First Review: ‛முதல் பாதி அட்டகாசமா இருக்கு... மீதியை வந்து சொல்றேன்..’ வெளியானது புஷ்பா விமர்சனம்!
புஷ்பா படத்தின் முதற்கட்ட விமர்சனம் தற்போது வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் புஷ்பா. தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பபை பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 17-ந் தேதி வெளியாக உள்ளது.
புஷ்பா திரைப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாகவும், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ளார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து, மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், படம் தொடர்பான முதல் விமர்சனம் அரேபியாவில் இருந்து வெளியாகியிருக்கிறது.
ஆம், திரைப்பட விமர்சகரும் ஓவர்சீஸ் சென்சார் ஆணையத்தின் உறுப்பினருமான உமையர் சந்து அரேபியாவில் புஷ்பா படத்தை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், புஷ்பா படத்தை ஃபர்ஸ்ட் ஆஃபை பார்த்து விட்டதாகவும், படம் வேற லெவலில் இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் சென்சார் போர்டுடன் இணைந்து முழுபடத்தை பார்த்து முழு விமர்சனத்தையும் வெளியிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
First Half of #Pushpa is Racy Terrific 💥 #PushpaTheRiseOnDec17th
— Umair Sandhu (@UmairSandu) December 14, 2021