Puneeth Rajkumar: அப்புவை மறக்க முடியவில்லை...புனீத் ராஜ்குமாரின் நினைவுநாளில் கலங்கிய பிரபலங்கள்
Puneeth Raj Kumar Death Anniversary:கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலியைத் தொடர்ந்து அவரை திரையுலக பிரபலங்கள் பலர் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். சிறு வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்தவர்களுள் இவரும் ஒருவர். இவரது இயற்பெயர் லோஹித், திரையுலகிற்காக இவரது பெயர் புனீத் ராஜ் குமார் என மாற்றப்பட்டது. இத்தனை பெயர்களை கொண்டிருந்தாலும், இவர் செல்லமாக அழைக்கப்படுவது “அப்பு” என்ற பெயரால்தான். 2002ஆம் ஆண்டு இவர் நடித்திருந்த அப்பு திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரத்தை நினைவு கூறும் வகையில், இவருக்கு அப்பு என்பது செல்லப் பெயராகி விட்டது.
புனீத்தின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் வரேவற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தன. குறிப்பாக இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான யுவரத்னா திரைப்படத்திரற்கு ஆடியன்ஸிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்படத்தில் அவருக்கு ஜோடியா சாயிஷா நடித்திருந்தார்.
மறைந்த நடிகர் புனீத் ராஜ் குமார், நடிப்பு மட்டுமன்றி பாடல்கள் பாடுவது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மற்றும் படங்களை தயாரித்து வழங்குவது என பன்முக திறமையுடையவர்.
ஓராண்டு நினைவஞ்சலி:
கன்னட திரையுலக ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய திரையுலகினரையே அதிர வைத்தது, புனீத்தின் மரணம். 46 வயதே ஆன புனீத், மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனை நம்ப மறுத்த அவரது ரசிகர்கள், வேறு ஏதோ ஒரு காரணத்தினால் புனீத் இறந்துள்ளதாக சந்தேகித்தனர். இறுதியில், அவர் மாரடைப்பினால் உயிரிழந்தது உறுதியானது.
இந்திய திரையுலகினர் அனைவரையும் சோகமடைய வைத்த புனீத் ராஜ்குமாரின் மரணம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையடுத்து, புனீத்தின் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களும் திரையுலகினரும், #AppuLiveson என்ற ஹேஷ்டேக்கிற்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்.
பிரபலங்களின் பதிவு:
புனீத் ராஜ்குமார், கன்னட திரையுலகினர் மட்டுமன்றி வெவ்வேறு சினிமா உலகைச் சேர்ந்தவர்களுடனும் நட்பு பாராட்டிய நடிகர். இவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, பலரும் இவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
Appu avare,
— R Sarath Kumar (@realsarathkumar) October 29, 2022
You still live in millions of hearts around the world. You live forever in everybody's mind.
You are a great soul and a great human being. Always being remembered as such.
I miss you a lot, Appu Avare. I miss you a lot.#PuneethRajkumar #Appu #MissYou #james pic.twitter.com/kbiufZLVSN
தமிழ் நடிகர் சரத்குமார், புனீத்திற்காக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புனீத் இன்னும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான இதயங்களில் வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், புனித்தைசிறந்த மனிதர் என்றும் அவரை மிகவும் ‘மிஸ்’ செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். சரத்குமாரும் புனீத் ராஜ்குமாரும் ஜேம்ஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் ஈ புகழ் சுதீப் கிச்சா, புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்துள்ள கண்டா கவுடி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண், இயக்குனர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோரும் புனீத் ராஜ் குமாரை நினைவு கூர்ந்துள்ளனர்.
புனீத்தின் கடைசி படம்:
புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் கண்டா கவுடி. டாக்குமண்டரி ட்ராமாவாக உருவாகியிருக்கும் இப்படம், நேற்று வெளியானது. புனீத் கடைசியாக நடித்திருக்கும் படம் என்பதால் அவரது நினைவாக அப்படத்தை காண, அனைவரும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது