Watch Video: தெரியலையா? செல்ஃபோன்ல பாருங்க! ஸ்டேடியத்தில் குடும்பத்துடன் அஜித் – ஷாலினி – க்யூட் வீடியோ!
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியை பார்க்க அஜித் – ஷாலினி தனது குடும்பத்துடன் வந்திருந்தனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியை பார்க்க அஜித் – ஷாலினி தனது குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் மேட்ச் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்போது அஜித்திடம் ஷாலினி யாரையோ காட்டுகிறார். ஆனால் அது அஜித்திற்கு சரியாக தெரியவில்லை போலும். உடனே ஷாலினி தனது செல்போனை எடுத்து கேமராவில் ஜூம் செய்து காண்பிக்கிறார். மேலும் அஜித்தும் மேட்ச் குறித்த சில விஷயங்களை ஷாலினியிடம் பகிர்ந்து கொள்கிறார்.
இவர்களுடன் மகள் அனோஷ்காவும் மகன் ஆத்விக்கும் வந்து மேட்சை கண்டு களித்தனர். இதில் ஆத்விக் மட்டும் சிஎஸ்கே டிசர்ட் போட்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்.
First public appearance of Ajith sir in India in few decades I guess ! pic.twitter.com/nc8qOYdJPc
— Prashanth Rangaswamy (@itisprashanth) April 25, 2025
இவை அனைத்தும் கேமராவில் பதிவாகி அஜித் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. பெரும்பாலும் பப்ளிசிட்டியை விரும்பாத அஜித்குமார் தனது குடும்பத்துடன் அவரது ரசிகர்களுக்கு காட்சி அளித்தது பிரம்மிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் க்யூட் ஃபேமிலி என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. இப்படத்தை அவரது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொதுமக்களிடம் இருந்தும் படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.






















