மேலும் அறிய

S.Panju | தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத இரட்டையர்களில் ஒருவர்... எஸ்.பஞ்சு பிறந்தநாள் இன்று!

தனித்தனியே பிறந்து வளர்ந்து பின்னாளில் சினிமா என்ற அச்சாணியின் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள்

ரா. கிருஷ்ணன் (1909–1997) மற்றும் சா. பஞ்சு (1915–1984) ஆகிய இருவரும் தமிழ் சினிமா கண்டெடுத்த இரட்டையர்கள். தனித்தனியே பிறந்து வளர்ந்து பின்னாளில் சினிமா என்ற அச்சாணியின் மூலம் ஒன்று சேர்தவர்கள். இவர்கள், இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியிருந்தனர். 

பூம்பாவை, நல்ல தம்பி, பராசக்தி, ரத்தக்கண்ணீர், பைத்தியக்காரன், தெய்வப்பிறவி, சர்வர் சுந்தரம், பெற்றால்தான் பிள்ளையா, குழந்தையும் தெய்வமும் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்தது. 

S.Panju | தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத இரட்டையர்களில் ஒருவர்... எஸ்.பஞ்சு பிறந்தநாள் இன்று!

சா. பஞ்சு 1915ம் ஆண்டு ஜனவரி 24 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரத்தில் பிறந்தார். தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். தனது 69 ஆவது வயதில் சென்னையில் பஞ்சு காலமானார். 

சினிமா வாழ்க்கை: 

தமிழ்சினிமாவில் 1930களில் பேசும் படம் அறிமுகமான பின்புதான் கீழ்தட்டு மக்களின் அரசியலும் உருவாக ஆரம்பித்தது. கர்நாடக இசை போன்ற உயர்க்கலாச்சாரத்தை பராமரித்து வந்த சினிமா உலகம்,  அதன்பின் சமானிய மக்களின் பிரதிநிதித்துவமாக  உருமாறியது. 40களில் வெளிவந்த திரைப்படங்கள தேசியவாத கருத்துக்களை முன்னெடுத்தது. இந்த காலகட்டத்தில், காந்திய சிந்தனைகள் கொண்ட கதையாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் ஆகியோரின் சமூகநிலையைத் திரைப்படங்கள் மூலம் முன்னிறுத்தினர். 

உதாரணமாக, குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் சார்தா சட்டத்தை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். இந்த சட்டம் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட வடிவத்த்துக்கு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் ஏற்றுக் கொண்டாலும், சத்தியமூர்த்தி போன்ற மூத்த  தீவிர காங்கிரஸ்காரர்கள் தீவிர எதிர்ப்பைக் காட்டினர். 

இந்த சார்தா சட்டத்தின் தேவையை வலியுருத்தும் வகையில், 1947ம் ஆண்டு கிருஷ்ணன்-பஞ்சு , 'பைத்தியக்காரன்' என்ற திரைப்படத்தை இயக்கினர். என்.எஸ். கே பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்தது. இந்த படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் 'காந்தா' மிகவும் அழகான, துடிப்பான, புத்திசாலித்தனம் கொண்டவள். சந்தர்ப்ப சூழ்நிலையால், மிகவும் வயதான  மிராசிதாரர் ஒருவரை மணமுடிக்கும் சூழல் ஏற்படுகிறது. அவரின் மகள், கணவனை இழந்த ஒரு  கைம்பெண். படத்தின் முடிவில், தான் மணமுடித்த காந்தாவை, காதலன் மூர்த்தியுடன் (எம்ஜிஆர் - துணை கதாபாத்திரம்) சேர்ந்து வாழ சம்மதித்துடன், தனது மகளுக்கு மறுமணமும் செய்து வைக்கிறார்.  2004 ஆம் ஆண்டில் வெளிவந்த 'காதல்' திரைப்படத்துக்கெல்லாம் இது முன்னோடியாகும். 

S.Panju | தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத இரட்டையர்களில் ஒருவர்... எஸ்.பஞ்சு பிறந்தநாள் இன்று!
பைத்தியக்காரன் - திரைப்படம்

இவர்கள் இயக்கிய ரத்தக்கண்ணீர், பராசக்தி, நல்லதம்பி உள்ளிட்ட திரைப்படங்கள் திராவிட இயக்கங்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரத்தக்கண்ணீர் பெண்களின் அவலநிலைய தத்துரூபமாக விளக்கியது. பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தின் மீது தீவிர பற்றுக் கொண்ட எம்.ஆர் ராதாவின் திரைஉலகில் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் இது அமைந்தது. நாயகனாக வரும் மோகனசுந்தரம் (எம்.ஆர்.ராதா)  தமிழ் கலாச்சாரத்தில் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பழமைவாதத்தை நையாண்டித் தனம் செய்கிறார். குடும்பத்தின் வற்புறுத்தலால் சந்திரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், காந்தா என்ற ஒரு விபச்சாரியுடன் உறவு வைத்துதனது வாழ்க்கையை  துளைக்கிறார். இறுதியில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தனது நெருங்கிய நண்பன் பாலுவுக்கும், தனது மனைவிக்கும்  திருமணம் முடித்து வைக்கிறார். வடநாட்டுக்காரர் ஒருவரை நம்பி போன 'காந்தா' மரணமடைகிறார்.         

S.Panju | தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத இரட்டையர்களில் ஒருவர்... எஸ்.பஞ்சு பிறந்தநாள் இன்று!

1947ல் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில்  அழகான, துடிப்பான, புத்திசாலித்தனம் பெண் கதாபாத்திரத்தின் பெயர் காந்தா. ரத்தக்கண்ணீர் படத்தில் கெட்ட நடத்தைக் கொண்ட, பிறரின் சொத்துக்களைக்  கவரும் கதாபாத்திரத்தின் பெயர் 'காந்தா'.  

1964 ஆம் ஆண்டு இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சர்வர் சுந்தரம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாகும். 

என்எஸ்கே, ராதாரவி, சிவாஜி, எம்.ஜி.ஆர் எனப் பல ஆண் கதாநாயகர்களை செத்துக்கியவர்கள் என்றால் அது மிகையாகாது. அதே சமயத்தில், பெண் கல்வி, பெண் மறுவாழ்வு, குழந்தை திருமணம் போன்ற சமூக கருத்தாக்கங்களை திரை ரசிகர்களுக்கு கொண்டு சென்ற பெருமையும் இந்த இரட்டையர்களுக்கு உண்டு.   

எஸ். பஞ்சுவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் அவரது, உன்னத படைப்புகளை நாம் நினைவுக் கூர்வோம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget