இனப்பெருக்க உரிமை சட்டம் நீக்கம்: மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்த பிரியங்கா சோப்ரா!
“ நான் மனம் உடைந்துவிட்டேன் - ஆர்வமும் வாக்குறுதியும் நிறைந்த டீன் ஏஜ் பெண்ணுக்கு, பள்ளிப் படிப்பை முடிக்கவோ அல்லது அவள் விரும்பும் வாழ்க்கையை வாழவோ முடியாது"
இனப்பெருக்க உரிமை மற்றும் கருக்கலைப்பு சட்டம்:
அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு ரோ வி வேட் என்னும் பெண்களின் இனப்பெருக்க உரிமையை பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனால் கொந்தளித்த பெண்கள் உச்ச நீதிமன்றத்தின் முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
View this post on Instagram
மிச்செல் ஒபாமா :
முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி மிச்சல் ஒபாமா , தனது சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் இந்த தீர்ப்பிற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ நான் மனம் உடைந்துவிட்டேன் - ஆர்வமும் வாக்குறுதியும் நிறைந்த டீன் ஏஜ் பெண்ணுக்கு, பள்ளிப் படிப்பை முடிக்கவோ அல்லது அவள் விரும்பும் வாழ்க்கையை வாழவோ முடியாது, ஏனெனில் அவளுடைய இனப்பெருக்க முடிவுகளை அவளது அரசு கட்டுப்படுத்துகிறது; தங்கள் குழந்தையின் எதிர்காலம் தங்கள் கண்களுக்கு முன்பாக ஆவியாகிவிடுவதைப் பார்க்கும் பெற்றோர்களுக்காக; சிறைத் தண்டனையின்றி இனி அவர்களுக்கு உதவ முடியாத சுகாதாரப் பணியாளர்களுக்காக.இப்போது அந்த கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது “ என குறிப்பிட்டுள்ளார்
View this post on Instagram
பிரியங்கா சோப்ரா:
மிச்செல் ஒபாமாவின் இந்த கருத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து , கருக்கலைப்பிற்கு எதிரான சட்டத்திற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு அளித்துள்ளார். அதே போல அவர் மற்றுமொரு புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார். அது ஒரு கார்டூன் .. ஒரு பக்கம் துப்பாக்கியும் , மறுபக்கம் கர்பிணியும் இருக்கின்றனர். அதன் மேலே துப்பாக்கிகள் சுமப்பதற்கு சுதந்திரம் , குழந்தைகளை சுமப்பதற்கு திணிப்பு என வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
ஹெய்லி பீபர் :
ஜெஸ்டின் பீபரின் மனைவி ஹெய்லி இது குறித்து கூறுகையில் “ பேச முடியவில்லை...எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயமாக இருக்கிறது “ என தெரிவித்துள்ளார்.