Priyanka Deshpande: “நிறைய குழந்தை பெத்துக்க ஆசை, அன்பு வேணும்” - உடைந்து அழுத விஜய் டிவி பிரியங்கா!
Priyanka Deshpande : குழந்தைகள் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என ஆசையாக இருக்கிறது என ஏக்கமாக பேசும் பிரியங்கா தேஷ்பாண்டே.
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரைட்டான தொகுப்பாளர்களாக பலரும் இருப்பார்கள், ஆனால் செல்லமான ஒரு தொகுப்பாளர் என்றால் அது நிச்சயமாக பிரியங்கா தேஷ்பாண்டேவாக தான் இருக்க முடியும். விஜய் டிவியின் ஆல் இன் ஆல் தொகுப்பாளராக இருந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே, ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார் பிரியங்கா தேஷ்பாண்டே. அப்போது அவர் தன்னுடைய ஏக்கம், ஆசை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார்.
பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசுகையில் "வாழ்க்கையில் நான் எடுத்த சில தப்பான முடிவுகளால் எங்கம்மாவை நான் கஷ்டப்படுத்திவிட்டேன். இனிமேல் என்னோட லைஃப்ல நான் எடுக்க போற எந்த முடிவும் என்னோட அம்மாவை பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
என்னோட பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நான் ஒவ்வொன்றாக பண்ணிட்டு வருகிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போறது, கார் வாங்குறது, மாடி வீடு கட்டுறது இப்படி நிறைவேற்றிக் கொண்டே வருகிறேன். அடுத்து என்னோட ஹெல்த் மேல கவனம் செலுத்த முயற்சி செய்து வருகிறேன். கோச் ஒருத்தரோட உதவியோட ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டு வரேன். அவரும் என்னை கண்டிப்பா ஃபிட்டாக்கி விடுவேன் என ப்ராமிஸ் பண்ணி இருக்கார்.
எனக்கும் வயசாகிகிட்டே இருக்கு. எனக்கும் ஒரு குழந்தை பெத்துக்கனும் என ஆசை. என்னை யாராவது அதிகமா லவ் பண்ணனும், தாங்கு தாங்குனு தாங்கணும், குழந்தை பெத்துக்கணும்னா நான் ஹெல்த்தியா இருக்கனும். அதுக்காக தான் இதெல்லாம் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதெல்லாம் யாராவது பக்கெட் லிஸ்டில் வச்சு இருப்பாங்களான்னு தெரியல. ஆனா இதெல்லாம் என்னுடைய ஆசை.
என்னோட தம்பி குழந்தைகூட விளையாடும் போது சந்தோஷமா இருக்கேன். அந்தக் குழந்தையால தான் நான் சர்வைவ் பண்ணிக்கிட்டு இருக்கேன். அவ தான் எங்க வீட்ல சந்தோஷம், நிம்மதி, சிரிப்பு எல்லாத்தையும் திருப்பி கொண்டு வந்து இருக்கா. நான் சின்ன வயசுல எப்படி இருந்தனோ அப்படி தான் அவளும் இருக்கா. அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். அவ தான் என்னுடைய முதல் குழந்தை.
என்னோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு நினச்சு எங்க அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. 34 வயசில் இருந்து சிங்கிள் மதரா இருந்து எங்களை ரொம்ப சிரமப்பட்டு வளர்த்தாங்க. அவங்களுக்கு நான் இனியும் கஷ்டத்தை கொடுக்க கூடாது" எனப் பேசியுள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே.