Priya Bhavani Shankar on his Boyfriend: லவ்வருக்கு பர்த்டே.. நீ மோசமான டீன் ஏஜ் பையன்.. இன்ஸ்டாவில் உருகிய பிரியா பவானி ஷங்கர்..!
புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான பிரியா பவானி ஷங்கருக்கு, விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான பிரியா பவானி ஷங்கருக்கு, விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ‘மேயாத மான்’ படத்தில் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர் கார்த்தியுடன் கடை குட்டி சிங்கம், எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், ஓ மணப்பெண்ணே, பிளட் மணி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவரும் ராஜசேகர் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும்.
View this post on Instagram
இருவரும் தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரியா பவானி ஷங்கர் தனது காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜ் மா.. நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பையனிலிருந்து, ஒரு அற்புதமான மனிதராக மாறியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். நான் ஒரு அதிஷ்டசாலி.
View this post on Instagram
ஏராளமான புன்னகை, சாகசங்கள், நட்பு, அன்பு, ஆசிர்வாதம், அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் உங்களுக்கு இந்த போட்டோ பிடிக்காது என்று தெரியும். அதனால்தான் நான் இதை பதிவிடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.