Rolex Role in Vikram: ரோலெக்ஸாக முதலில் நான்தான்..! விக்ரம் பட சீக்ரெட் சொன்ன நடிகர் பிருத்விராஜ்!
விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார் நடிகர் கமல்.
விக்ரம்' என்ற ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கமல்ஹாசன் நீண்ட நாட்களுக்கு பிறகு பவர் பேக்கான நடிப்பை வெளிப்படுத்தினார். இவரது நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அன்பளிப்பாக இந்த திரைப்படம் வெளியாகி 25 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.
இப்படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கமல்ஹாசன் தனது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்ஸஸ் காரைப் பரிசாக வழங்கியதுடன், படத்தில் பணியாற்றிய தலா 13 உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் அப்பாசி ஆர்டிஆர் 160 பைக்களை பரிசாக வழங்கினார். இதுதொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் ஒரு கலக்கு கலக்கியது.
View this post on Instagram
தொடர்ந்து, விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார் நடிகர் கமல். இந்தநிலையில், மலையாள நடிகர் மற்றும் இயக்குநருமான பிருத்விராஜ் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த கதாபாத்திரத்திற்கு தன்னைதான் லோகேஷ் நினைத்தார் என தெரிவித்தார். தற்போது அந்த செய்தி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
மலையாள டைரக்டர் சைஜி கைலாஷ் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள கடுவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தற்போது ரீலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் ப்ரொமோசனுக்காக படக்குழு சமீபத்தில் தமிழ்நாட்டில் செய்தியாளர்களை சந்தித்தது.
அப்பொழுது செய்தியாளர்கள் நடிகர் பிருத்விராஜிடம், லோகேஷ் கனகராஜ் ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு உங்களை முதலில் நினைத்திருந்தார். அது உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நடிகர் பிருத்விராஜ் சிரித்த முகத்துடன், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு என் பெயரை சொல்லி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகர் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர்கள் யாராவது நடித்து இருந்தால் அதற்கு நடிகர் பிருத்விராஜ் சரியாக இருந்து இருப்பார் என தெரிவித்து இருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்