Prince OTT Release: ஓடிடிக்கு வரும் பிரின்ஸ் படம்... எப்போ தெரியுமா? ...மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
தெலுங்கு திரைப்பட இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த "பிரின்ஸ்" திரைப்படம் தீபாவளி ரிலீஸாக கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியானது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தெலுங்கு திரைப்பட இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த "பிரின்ஸ்" திரைப்படம் தீபாவளி ரிலீஸாக கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சிவாவின் முதல் தீபாவளி வெளியீடாக இப்படம் அமைந்திருந்தது. ஏற்கனவே டாக்டர், டான் ஆகிய படங்கள் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்த அவருக்கு டான் படம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
View this post on Instagram
பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. காட்சிகள் ஒன்றும் ரசிக்கும்படி இல்லை என்றும் சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளங்களில் பிரின்ஸ் படம் குறித்து விமர்சனங்கள் எழுந்தது. இதன் விளைவு ஒரு வாரத்திற்குள்ளாகவே பல தியேட்டர்களில் பிரின்ஸ் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. அதேசமயம் பிரின்ஸ் படத்துக்கு எதிராக களம் கண்ட சர்தார் படம் வசூலில் நல்ல லாபம் பார்த்தது.
View this post on Instagram
இதனிடையே சர்தார் படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பிரின்ஸ் படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 25 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.