Love Today Box Office Collectoin: அரங்கம் நிறைந்த காட்சிகள்.. விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்.. லல் டுடே வசூல் எவ்வளவு தெரியுமா?
லவ் டுடே படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று இருக்கிறது. காதலர்களுக்குள் நடக்கும் முட்டல் மோதல்களை, காமெடி திரைக்கதையாக கொண்டு உருவான இந்தப்படத்தில் நடிகை இவானா, சத்யராஜ், ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். வெளியான அன்றைய தினத்தில் இருந்து நேற்று இரவு வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக சென்ற இந்தப்படத்தின் வசூல் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக, லல் டுடே படத்தின் ட்ரெய்லர், அதன்பின்னராக வெளியான பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரின் நேர்காணல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக ஏற்படுத்தி இருந்ததால், அதனுடன் போட்டிப்படங்களை தாண்டி, லவ் டுடே படத்திற்கு ரசிகர்கள் வந்தனர். முதல் காட்சி முடிந்து வெளியான பாசிட்டிவான விமர்சனங்கள், அடுத்தடுத்த நாட்களில் திரையரங்கிற்கு அதிகமான ரசிகர்கள் வருவதற்கு ஏதுவாக அமைந்தது. அந்த வகையில், வாரமுடிவில் லல் டுடே திரைப்படம் 13.40 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 12.70 கோடி வசூலித்திருக்கும் இந்தப்படம் கர்நாடகாவில் 80 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் தமிழ்நாட்டில் 40 கோடி வசூல் செய்திருந்த நிலையில், இந்தப்படம் 50 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் விபரம்
வெள்ளிக்கிழமை - 2.80 கோடி
சனிக்கிழமை - 4.80கோடி
ஞாயிற்றுக்கிழமை -5.90 கோடி
மொத்தம் - 13.50 கோடி