'என்னுடைய பழைய படத்த பார்க்கும்போது அது ஃபீல் ஆகுது..' நடிப்பு குறித்து மனம் திறந்த பிரபுதேவா!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். பிரபுதேவா நடன அமைப்பாளர் மட்டுமின்றி நடிகரும்கூட.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். பிரபுதேவா நடன அமைப்பாளர் மட்டுமின்றி நடிகரும்கூட. அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.
அண்மையில் இவரது பொய்க்கால் குதிரை படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதனை ஒட்டி அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
"விஜய்சேதுபதி ஒரு நாடகக்குழுவிடம் உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும் எனக் கேட்கும்போது உங்களைத் தான் ரொம்ப பிடிக்கும் என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். எல்லோரும் பிரபுதேவாவை டான்ஸராக மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் அவர் நல்ல பெர்ஃபார்மர்" இப்படி உங்களைப் பற்றி நாடகக் கலைஞர்கள் சொல்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்னவென்று யூடியூப் சேனலில் ஒரு நிருபர் கேட்க அதற்கு பிரபுதேவா சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார்.
நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். ஆனால் நான் நல்ல பெர்ஃபார்மர் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் தான் அதைச் சொல்கிறீர்கள். நான் படத்தில் ஈடுபாடுடன் நடிப்பேன். அதுதான் பெர்ஃபார்மன்ஸ் போல. கதையைக் கேட்டு உள்வாங்கிக் கொள்வேன். அதைத்தான் நான் நடிப்பாக வெளிப்படுத்துவேன். ஆனால் என் பழைய படங்களைப் பார்க்கும்போது அதில் ஒரு மெச்சூரிட்டி இருப்பதை நான் உணர்கிறேன்.
இவ்வாறு பிரபுதேவா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
பிரபுதேவா தற்போது பொய்க்கால் குதிரை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இது ஆக்ஷன் என்டர்டெய்ன்மென்ட் ஜானர் படம்.
இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. படத்தில் பிரபுதேவா ஒற்றைக் காலுடன் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். பிரபுதேவா இப்படியான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொய்க்கால் குதிரை ஒற்றைக் காலுடன் நடித்தது சவாலாக இருந்தது என்று பிரபுதேவா கூறியுள்ளார். நான் எப்பவும் செய்யும் ஸ்ட்பெகளைக் கூட நான் கடினமானதாகவே உணர்ந்தேன். அதுபோல் சண்டைக் காட்சிகளும் கடினமாகவே இருந்தது என்று தனது அனுபவங்களைக் கூறினார். படத்தின் நாயகி வரலட்சுமி பேசுகையில், படத்தில் எனது முதல் சீனே மாஸ்டரின் கன்னத்தில் மூன்று முறை ஓங்கி அறைய வேண்டும். அது எனக்கு ஷாக்காக இருந்தது. ஆனால் படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும். நான் எப்பவும் பிரபுதேவா மாஸ்டரோட ஃபேன் கேர்ள் என்றார்.