Eruma Saani Vijay Marriage: எரும சாணி விஜய்க்கு டும் டும் டும்... காதலியை கரம் பிடித்த யூடியூபர்...! ரசிகர்கள் வாழ்த்து மழை..!
புகழ்பெற்ற யூ டியூபரும், நடிகர், இயக்குனர் என்ற பன்முகத்திறன் கொண்ட எருமசாணி விஜய் - நட்சத்திரா திருமணம் இனிதே நடந்தது.
![Eruma Saani Vijay Marriage: எரும சாணி விஜய்க்கு டும் டும் டும்... காதலியை கரம் பிடித்த யூடியூபர்...! ரசிகர்கள் வாழ்த்து மழை..! Popular youtuber Eruma Saani Vijay married to nakshatra marriage photos goes viral online Eruma Saani Vijay Marriage: எரும சாணி விஜய்க்கு டும் டும் டும்... காதலியை கரம் பிடித்த யூடியூபர்...! ரசிகர்கள் வாழ்த்து மழை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/f516783e3f3b69d4dae9e7825ee8f1dd1684935574577224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திறமை மட்டுமே இருந்தால் போதும் முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம் என்ற புதிய யுக்தியை இன்று ஏராளமானோர் செயல்படுத்தி வருகின்றனர். வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இருந்த யூடியூப் மூலம் இன்று பலரும் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் அளவிற்கு வளர்ந்தது மட்டுமல்லாமல் மிகவும் பிரபலமான ஒரு பர்சனலிடியாகவும் உயர்ந்து விடுகிறார்கள். அப்படி மிகவும் பிரபலமான யூடியூபர் தான் 'எரும சாணி' விஜய்.
எரும சாணி விஜய்க்கு திருமணம்:
கொரோனா காலகட்டத்தில் வீட்டில் முடங்கி இருந்த மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது இந்த யூடியூப். அந்த சமயத்தில் துறுதுறுப்பான நகைச்சுவையான பேச்சு, கோலி குண்டு கண்ணை உருட்டி உருட்டி வித்தியாசமான வீடியோ போட்ட விஜய் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். எரும சாணி என்ற அவரின் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்ததால் அவரை எரும சாணி விஜய் என்றே அழைக்கிறார்கள். 36 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரின் சேனலை பின் தொடர்கின்றனர்.
யூடியூபில் இருந்து அடுத்த கட்டமாக வெள்ளித்திரையில் ஹிப் ஹாப் ஆதி நடித்த 'மீசையை முறுக்கு', 'நான் சிரித்தால்' படங்களின் மூலம் என்ட்ரி கொடுத்தார். திரைப்படத்தில் நடிக்க துவங்கியவுடன் தனது இயக்குநர் கனவையும் 'டி பிளாக்' படத்தின் மூலம் நிறைவேற்றி கொண்டார். அருள்நிதி ஹீரோவாக நடித்த படத்தின் திரைக்கதை எழுதி 'டி பிளாக்' படத்தை இயக்கினார் எரும சாணி விஜய். கல்லூரியை மையமாக வைத்து திரில்லர் ஜானரில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை இயக்கியதுடன் அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.
வைரலாகும் திருமண புகைப்படங்கள் :
இயக்கிய படம் வெற்றி படமாக அமைந்த உடன் தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்திராவை திருமணம் செய்து கொண்டார் எரும சாணி விஜய். பெற்றோர்கள் முன்னிலையில் இன்று இந்த காதல் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பல பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொண்டு புதுமண தம்பதியினரை வாழ்த்தினர். அவரின் திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் எரும சாணி விஜய் . கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதியினருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எரும சாணி விஜய் மனைவி நக்ஷத்ராவும் மீடியாவை சேர்ந்தவர் தான். பேஷன் டிசைனர், விலாகர், மாடலிங் என பல துறையில் பிரபலமானவர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)