Ponniyin Selvan Teaser: இதை கூட விட்டுவைக்காத நெட்டிசன்கள்.. வெளியிடும் முன்பே வெளியான பொன்னியின் செல்வன் டீசர்!
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் முன்பே படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இன்று (ஜூலை. 08) மாலை ஆறு மணிக்கு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த டீசர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் டீசலை சோஷியல் மீடியாவில் வெளியிடும் நட்சத்திரங்களை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதன்படி தமிழில் நடிகர் சூர்யாவும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ராக்ஷீத் ஷெட்டியும், இந்தியில் அமிதாப்பச்சனும் வெளியிட இருந்தனர்.
இந்தநிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் முன்பே படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து இது என்னடா பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை.. இதை பார்க்கும்போதே மனசு ஆகுது வேதனை என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வெளியான டீசரின் சில காட்சிகள் இதோ :
சூர்யா வெளியிட்ட பொன்னியின் செல்வன் டீசர் :
நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் மாலை 6 மணிக்கு வெளியிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், பலரின் கனவை... நனவாக்கினார் நம்ம மணி சார்!! பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் டீசர் இதோ. ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குழுவிற்கும் வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.
The dream of many… made a reality by our Mani sir!! Here’s the teaser of the magnum opus #PS1 https://t.co/fbWn9VxJ4K
— Suriya Sivakumar (@Suriya_offl) July 8, 2022
In cinemas from 30th September.
Congratulations to the whole team of actors & technicians!
மேலும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ராக்ஷீத் ஷெட்டியும், இந்தியில் அமிதாப்பச்சனும் பொன்னியின் செல்வன் டீசரை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்