மேலும் அறிய

Mani Ratnam: பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்போது வரும்? - ஓபனாக பேசிய மணிரத்னம்!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று இயக்குநர் மணிரத்னம் பேசியிருக்கிறார். 

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று இயக்குநர் மணிரத்னம் பேசியிருக்கிறார். 

சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மணிரத்னத்திடம்  ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 2 எப்போது வெளியாகும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் வெளியான 6 முதல் 9 மாதங்களுக்குள் வெளியாகும் என கூறியுள்ளார். வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழு படத்தின் பிரோமோஷன் சார்ந்த பணிகளில் படுபிசியாக சுற்றி வருகிறது.

இதற்கிடையே பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கான ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியையும் சன் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Madras Talkies (@madrastalkies)

முன்னதாக, கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். 

இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை  பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.  

இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

View this post on Instagram
 
A post shared by Lyca Productions (@lyca_productions)

இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget