மேலும் அறிய
Advertisement
‘பொன்னியின் செல்வன் 2' மீது எனக்கு வருத்தம்’; குறைகளை அள்ளி வீசும் இயக்குநர் மோகன் ஜி
சோழர்கள் பெருமையும் பொன்னியின் செல்வர் பெருமையும் அதிகமாக சொல்லி இருந்தால், அதைத்தான் எதிர்பார்த்தோம் , அது இல்லை என்பதால் வருத்தம்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உற்சாகம் ஏற்படுத்தும், வகையில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேளிக்கை பொருட்காட்சி துவக்க விழா இன்று நடைபெற்றது. கேளிக்கை பொருட்காட்சி துவக்க விழாவில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கலந்துகொண்டு கேளிக்கை பொருட்காட்சி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குனர் மோகன் ஜி,
பொன்னியின் செல்வன் கதை கல்கி அவர்கள் எழுதிய நாவலே ஒரு புனைவு என்று சொல்லி தான் வந்திருக்கிறது. அவருடைய கற்பனை கலந்த புனைவு அதைத் தாண்டி இந்த படத்தில், நிறைய புனைவுகள் இருக்கிறது என்று தான் சொல்லி இருந்தேன், அதை உடனே நான் வந்து பொன்னியின் செல்வன் படம் பிடிக்கவில்லை, நான் அதை எதிர்த்து பேசியதாக நிறைய செய்திகள் நேற்று வந்தது பார்த்தேன். அப்படி இல்லை நாம் வந்து ஒரு வரலாற்று சம்பந்தமாக நிறைய விஷயங்களை தெரிந்திருக்கும் போது, அதை தப்பாக காட்டும்போது ஒரு வருத்தம் வருகிறது.
வருத்தமாக உள்ளது
ஆதித்த கரிகாலனை தான் நிறைய இடத்தில், படத்தில் காட்டியிருக்கிறார்கள், அதுவும் இல்லாமல் நந்தினி எனும் கதாபாத்திரம் படத்தில் வரும், அத்தனை அரசர்களையும் சுலபமாக அவர்கள் பார்த்த பொழுது அரசர்களை கவர்ந்து விடுகிறார்கள் என்கின்ற விஷயம் வரலாறாக பார்க்கும்போது, ஏதோ ஒரு விஷயம் மக்களுக்கு தப்பாக போய் சேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லிவிட்டு ஒன்று, இரண்டு கெட்ட விஷயங்களை சொன்னார்கள் என்றால் தெரியாது படம் முழுக்கவே, ஒரு பெண்ணை சுற்றி அவ்வளவு பெரிய படம் அமைந்திருக்கிறது என்பது வருத்தமாக உள்ளது. இதைத் தாண்டி சோழர்கள் உடைய வாழ்க்கை முறை, வீரம் அவர்களுடைய கலாச்சாரம் அவர்களுடைய போர் முறை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்கலாம், என்பதுதான் என் கருத்து. சோழர்கள் பெருமையும் பொன்னியின் செல்வர் பெருமையும், சொல்லி இருந்தால் அதைத்தான் எதிர்பார்த்தோம் அது இல்லை என்பதால் வருத்தம்.
கேரளா ஸ்டோரி படம்
கேரளா ஸ்டோரி படம், பார்க்கவில்லை, டிரைலர் மட்டும்தான் பார்த்தேன் அதை விமர்சனம் சொல்வது தவறு, அதைத் தாண்டி சென்சார் செய்யப்பட்ட படத்தை நீதிமன்றம் தடை செய்ய மாட்டார்கள் படத்தை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு தான் உண்டு. படம் பார்த்துவிட்டு அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று விவாதம் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதைத் தாண்டி எல்லா மதத்தில் இருக்கிற தப்பைச் சொல்லலாமே, தவிர மொத்தமாக ஒரு மதமாக இப்படித்தான் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ' கேரளா ஸ்டோரி அப்படி இருந்தால் நானும் எதிர்ப்பேன் நடந்த விஷயங்களை தரவுகளுடன் சொல்லி இருந்தால் அதை எடுக்க இயக்குனர் தயாரிப்பாளர் பக்கம் நிற்பேன் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion