மேலும் அறிய

PS 2 Box Office Collection: 4 நாள்களில் 200 கோடி...கலவையான விமர்சனங்கள் தாண்டி வசூலைக் குவிக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 2!

ஏப்.28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நிலையில், நான்கே நாள்களில் உலகம் முழுவதும் 200 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்  ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத் குமார், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஷோபிதா, விக்ரம் பிரபு, ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 2. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த ஏப்.28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நிலையில், இப்படம் நான்கே நாள்களில் உலகம் முழுவதும் 200 கோடிகளை வசூலித்துள்ளது. 

திட்டமிட்டபடி சம்மர் ரிலீஸ்

இந்தப் படத்தின் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்து கோலிவுட்டில் உச்சக்கட்ட வசூல் மழையைப் பெற்றது. சுமார் 500 கோடிகளை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் இந்தப் படம் கோலோச்சிய நிலையில், உடனடியாக இரண்டாம் பாகத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டு பாகங்களும் முழுமையாக ஏற்கெனவே படமாக்கப்பட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ஏப்.28 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

கலவையான விமர்சனங்கள்

அதன்படி இந்தப் படம் கடந்த வாரம் வெளியான நிலையில், முதல் காட்சி முடிந்து பரவலாக படம் பாசிட்டிவ் ரிவ்யூக்களை அள்ளியது. ஆனால் திரைக்கதைக்காக இயக்குநர் மணிரத்னம் கதையில் சில மாற்றங்கள் செய்த நிலையில், நாவல் வாசகர்களை படம் அதிருப்தியில் ஆழ்த்தி விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் கலவையான விமர்சனங்கள் தாண்டி படம் 2 நாள்களில் உலகம் முழுவதும் 100 கோடி வசூலித்ததாக நேற்று முன் தினம் தகவல் வெளியானது.

வசூல் வேட்டை!

அந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 4 நாள்களில் 200 கோடிகள் வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வெளியான முதல் நாளில் 80 கோடிகளையும், இரண்டாம் நாளில் 70 கோடிகளையும் வசூலித்து மாஸ் காட்டிய நிலையி, முதல் பாகத்தை இரண்டாம் பாகம் வசூல்ரீதியாக விஞ்சவில்லை என்றே தகவல் வெளியாகி வருகின்றன.

எனினும் விமர்சனங்கள் தாண்டி தொடர் விடுமுறை காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் பாகத்தின் வசூலைத் தாண்டுமா என படக்குழுவினர் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget