ஆபாச படங்களில் நடித்ததாக பிரபல நடிகை மீது வழக்கு.. பணத்திற்காக இதை செய்தாரா.. பரபரப்பை கிளப்பும் புகார்
மலையாள சினிமாவில் ஆபாச படங்களில் நடித்ததாக பிரபல நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மலையாள சினிமாவில் ரதிநிர்வேதம், களிமண், சால்ட் அண்ட் பெப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்து உச்சம் தொட்டவர். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பண தேவைக்காக ஆபாச படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்திருப்பதாக எர்ணாகுளம் போலீசார் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரதிநிர்வேதம் படத்தில் அதீத கவர்ச்சி
ஸ்வேதா மேனன் நடிப்பில் வெளியான ரதிநிர்வேதம் திரைப்படம் மலையாள சினிமாவில் அவருக்கான மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறலாம். அப்படத்தில் 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் வாழும் பெண்ணின் கதையை மையப்படுத்திய கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.ஒரு பெண்ணின் தவிப்பு, தனிமை என உணர்ச்சி கலந்த படமாகவே இருந்தது. ஜாதகத்தால் திருமணம் தள்ளி போகிறது. அதே நேரத்தில் அதே பகுதியில் வாழும் இளைஞன் ஒருவன் சிறு வயதில் இருந்தே ஸ்வேதா மேனன் மீது தனிப்பாசம் காட்டுகிறான். ஆனால், காமம் கலந்த காதலாக மாறுகிறது. இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் அதீத கவர்ச்சி என்றே விமர்சிக்கபபட்டது.
நடிகை ஸ்வேதா மேனன் மீது புகார்
அதேபோன்று களிமண் படத்தில் நடித்த போது ஸ்வேதா மேனன் கர்ப்பமாக இருந்தார். இப்படத்திற்காக நிஜ கர்ப்பகாலத்தையும், குழந்தை பிறப்பதையும் படமாகவே எடுக்கப்பட்டது. இதுவும் விமர்சனத்திற்குள்ளானது. இது போன்ற படங்களால் தான் ஸ்வேதா மேனன் மலையாள சினிமாவில் தனித்து காணப்பட்டாலும் அதுவே இப்போது பிரச்னையாக வெடித்துள்ளது. இந்நிலையில், கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான மார்ட்டின் என்பவர் ஸ்வேதா மேனனுக்கு எதிராக கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், நடிகை ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம், பாலேரி மாணிக்கம், களிமண் போன்ற மலையாள படங்களில் ஆபாசமாக நடித்துள்ளார்.
நடிகை மீது வழக்குப்பதிவு
மேலும், காமசூத்ரா போன்ற ஆணுறை விளம்பரத்திலும் நடித்து பணம் சம்பாதித்துள்ளார். நிதி தேவைக்காக அவர் ஆபாச படங்களில் நடித்ததை சுட்டிக்காட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு பதிவு செய்ய கொச்சி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் கொச்சி போலீசார் நடிகை ஸ்வேதா மேனன் மீது ஆபாசத்தைத் தடுக்கும் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் போட்டி
இதனிடையே மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். இந்தப் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு வேட்பாளர்களில், மூத்த நடிகர் ஜெகதீஷ் உட்பட நான்கு பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். ஸ்வேதா மேனன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இந்த சூழலில் அவர் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது இதை எவ்வாறு எதிர்கொள்வார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















