பாக்ஸ் ஆபிஸ்சில் மிரட்டிய டாப் இந்திய படங்கள்

Published by: ஜேம்ஸ்
Image Source: IMDb

பஜ்ரங்கி பைஜான்

கபீர் கான் இயக்கிய பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் உலகளவில் 919 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது

Image Source: IMDb

பதான்

சித்தார்த் ஆனந்த் இயக்கிய, ஷாருக் கான் நடித்த இப்படம் உலகம் முழுவதும் ₹1,055 கோடியை தாண்டி சாதனை படைத்தது.

Image Source: IMDb

கல்கி 2898 ஏடி

நாக் அஷ்வின் இயக்கிய இப்படம் ஒரு அறிவியல் சார்ந்த படமாகும். இது உலகம் முழுவதும் ₹1,042 கோடியை கடந்து, இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக திகழ்கிறது.

Image Source: IMDb

ஆர்ஆர்ஆர்

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ளனர். சுமார் 550 கோடி ரூபாய் தயாரிப்பு செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1253-1387 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

Image Source: IMDb

ஜவான்

ஷாருக் கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 1,160 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Image Source: IMDb

கேஜிஎஃப்- 2

யஷ் நடித்த மற்றும் பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் ₹1,215 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது, இது அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாகும்.

Image Source: IMDb

தங்கல்

ஆமீர் கான் நடித்த இந்தி மொழி வாழ்க்கை வரலாற்று விளையாட்டு நாடக திரைப்படம், இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். இப்படம் உலகம் முழுவதும் ₹1,968 கோடி முதல் ₹2,200 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Image Source: IMDb

பாகுபலி 2: தி கன்க்ளூஷன்

தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகி, பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படம், உலகளவில் சுமார் ₹1,810 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாகும்.

Image Source: IMDb

புஷ்பா: தி ரூல் – பாகம் 2

சுகுமார் இயக்கிய, அல்லு அர்ஜுன் நடித்த இப்படம், உலகளவில் ₹1,742 கோடிக்கு மேல் வசூலித்து, அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Image Source: IMDb