Pichaikkaran 2 Trailer: சம்மரில் மகுடம் சூட வருகிறார் பிச்சைக்காரன் -2..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக்பீக் ட்ரைலரை வெளியிட்ட படக்குழு படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக்பீக் ட்ரைலரை வெளியிட்ட படக்குழு, படம் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் பிச்சைக்காரன். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த இரண்டாம் பாகமும் பிச்சைக்காரன் 2 மற்றும் பிச்சகாடு 2 என தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மிகவும் மும்மரமாக உருவாகி வருகிறது.
பிச்சைக்காரன் 2 அப்டேட் :
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் அப்டேட் ஒன்று நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டு இருந்தார். அதில், பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரெய்லர் நாளை மாலை வெளியாகும் என அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டு இருந்தார்.
அதன்படி இன்று மாலை பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.